உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விநாயகர் சதுர்த்தி இனி மாநில விழா: மஹா., அரசு அறிவிப்பு

விநாயகர் சதுர்த்தி இனி மாநில விழா: மஹா., அரசு அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மஹாராஷ்டிராவில் விநாயகர் சதுர்த்திக்கு மாநில விழா என்ற அந்தஸ்தை வழங்கி அம்மாநில அரசு கவுரவித்துள்ளது. நாடு முழுதும் வரும் 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. குறிப்பாக மஹாராஷ்டிராவில் 10 நாட்கள் வரை விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக நடைபெறும். இதற்காக மும்பையில் பல்வேறு இடங்களில் பிரமாண்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், பஜனைகள் நடத்தப்படும். இதில், பொதுமக்கள், பக்தர்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்களும் கலந்து கொள்வர். இந்நிலையில், மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்திக்கு, மஹாராஷ்டிரா அரசு மாநில விழா என்ற அந்தஸ்தை வழங்கி கவுரவித்துள்ளது. இதனால், பக்தர்களும், விழா கமிட்டியினரும் மகிழ்ச்சிஅடைந்துள்ளனர். மும்பையில் விநாயகர் பந்தல்களை ஒருங்கிணைக்கும், பிரிஹன் மும்பை சர்வஜனிக் சமன்வய சமிதியின் தலைவர் நரேஷ் தஹி பாவ்கர் கூறியுள்ளதாவது: இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை மாநில விழாவாக அறிவித்த மஹா., அரசு, விழா செலவுகளுக்காக 11 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது . ஆனால், அந்த நிதி போதுமானதாக இருக்காது. விநாயகர் சதுர்த்தி விழா அமைப்பினர் நுாலகங்கள் நடத்துவது, சமூக மற்றும் பொருளாதார ரீதியிலான உதவிகளை வழங்குவது என, ஆண்டு முழுதுமே சமூக பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கும் மாநில அரசு நிதியுதவி வழங்கினால், சமூகப் பணி தொய்வு இல்லாமல், தீவிரமாக நடக்கும். 1,800 பஜனை அமைப்பினருக்கு மட்டும் அரசு சார்பில் தலா 25,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. அதே போல், 25 ஆண்டுகள் பழமையான விநாயகர் சதுர்த்தி விழா அமைப்புகளுக்கும் நிதியுதவி வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Palanisamy T
ஆக 25, 2025 20:04

தமிழகத்திலும் இப்படி இவ்விழாவை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் -பிள்ளையார் சதூர்த்தி விழாவை - மாநில விழாவாக கொண்டாடும் நன்னாள் வரவேண்டும். தமிழக அரசு மக்களின் உணர்வை கவனத்தில் கொள்ளவேண்டும். மஹாராஷ்டிர அரசு இதற்கு ஆரம்பமாக பிள்ளையார் சுழியேப் போட்டு விட்டார்கள்.


venugopal s
ஆக 25, 2025 18:49

மஹாராஷ்டிரா மக்களுக்கு உருப்படியாக ஒன்றும் செய்வில்லை,அப்புறம் நாங்கள் எப்படித்தான் ஓட்டு வாங்கி தேர்தலில் வெற்றி பெறுவது?


மூர்க்கன்
ஆக 25, 2025 11:06

டைனோசர்க்கும் இது போல கொண்டாட வேண்டும். கிரேக்க நாடுகளில் அதன் கடவுளர் சிலைகளை எல்லாம் மியூசியத்திற்கு அனுப்பி வைத்து விட்டார்கள்.


Tamilan
ஆக 25, 2025 09:00

இந்து மதத்தை வைத்தும் கொள்ளையடிக்கும் கும்பல்


Jack
ஆக 25, 2025 09:22

அறிவாலயத்தில் தேர்தல் நிதி வசூல் ..பிரார்த்தனை கூடங்களில் தசமபாகம்


அப்பாவி
ஆக 25, 2025 08:45

இப்பிடி பெரிய பெரிய சிலைகளை கரைத்தால் மும்பாய் கடல் பகுதியை மீட்டெடுத்து புதுசா வூடுங்க கட்டலாம்.


SANKAR
ஆக 25, 2025 09:34

already a scheme called backbay reclamation done decades ago.


Jack
ஆக 25, 2025 07:52

நவராத்திரி துர்கா பூஜையும் விநாயகர் சதுர்த்தியும் பொது நிகழ்ச்சியாக நடத்தப்படும் சமூக நிகழ்ச்சி ..


Priyan Vadanad
ஆக 25, 2025 07:18

தமிழ்நாட்டிலும் இந்த பெருவிழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்று மலையிலிருந்து மடுவரை நிறைய பேசுவார்கள். நல்லது நடக்கட்டும். சந்தோசம்.


ராஜாராம்,நத்தம்
ஆக 25, 2025 08:57

என்னதான் வெளியே இது போன்ற நல்லிணக்க கருத்தை போட்டாலும் இந்த மதம்மாறிகளுக்கு வயிறு எரிச்சல் இருக்கத்தான் செய்யும்


சமீபத்திய செய்தி