உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புற்றுநோயாளிகளிடம் போலி மாத்திரை விற்பனை செய்த கும்பல் சிக்கியது

புற்றுநோயாளிகளிடம் போலி மாத்திரை விற்பனை செய்த கும்பல் சிக்கியது

புதுடில்லி:டில்லியில் புற்றுநோயாளிகளை குறிவைத்து, சமூக வலைதளங்கள் வாயிலாக போலி மாத்திரைகளை விற்பனை செய்து, மோசடியில் ஈடுபட்டு ஆறு பேர் அடங்கிய கும்பலை போலீசார் நேற்று கைது செய்தனர். புற்றுநோய்க்கான மாத்திரைகள் அதிக விலை உடையவை. இந்த மாத்திரைகளை தள்ளுபடி விலையில் விற்பதாக டில்லியைச் சேர்ந்த ஒரு கும்பல், சமூக வலைதளங்கள் வாயிலாக விளம்பரம் செய்து வந்தது. இதை நம்பிய புற்றுநோயாளிகள் சிலர், அவர்களை தொடர்பு கொண்டனர். அப்போது, பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மாத்திரைகளை குறைந்த விலைக்கு தருவதாக, அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். விற்பனைக்கு தடை செய்யப்பட்ட போலியான மாத்திரைகளை இந்த கும்பல், 50,000 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது. ஆனால், இவை போலி மாத்திரைகள் என தெரியவந்ததை அடுத்து, ஏமாந்த நோயாளிகள் சிலர், போலீசில் புகாரளித்தனர். இது குறித்து தீவிரமாக விசாரணை நடத்திய போலீசார், டில்லியைச் சேர்ந்த நீரஜ் குமார், அனில் குமார், தனேஜி சர்மா, தீராஜ் குமார், பிரவீன், ஜ்யோதி குரோவர் ஆகியோரை நேற்று கைது செய்தனர். இந்த கும்பலுடன் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ