உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் சட்டவிரோதமாக குடியேறிய கும்பல் சிக்கியது; வங்க தேசத்தினர் 6 பேர் உட்பட 11 பேர் கைது

டில்லியில் சட்டவிரோதமாக குடியேறிய கும்பல் சிக்கியது; வங்க தேசத்தினர் 6 பேர் உட்பட 11 பேர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் சட்ட விரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் ஆறு பேர் மற்றும் அவர்களுக்கு உதவிய இந்தியர்கள் 5 பேர் என மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டனர். டில்லியில் வங்கதேசத்தினர் சட்ட விரோதமாக தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். சட்டவிரோதமாக குடியேறியவர்களை இந்தியாவிற்குள் நுழைய உதவிய ஒரு கும்பலை போலீசார் கண்டுபிடித்தனர். சட்ட விரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் ஆறு பேர் மற்றும் அவர்களுக்கு உதவிய இந்தியர்கள் 5 பேர் என மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டனர். சட்ட விரோதமாக குடியேறியவர்களில் முக்கியமான நபராக 55 வயதான சந்த் மியாவால் இருந்துள்ளார். இவர் நான்கு வயதில் இந்தியாவிற்குள் நுழைந்து போலி ஆவணங்கள் தயாரித்து வசித்து வந்துள்ளார்.இவர், சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் நாட்டில் நிரந்தரமாகத் தங்கி வேலைவாய்ப்பைப் பெறுவதற்காக, போலி ஆவணங்களை தயாரித்துள்ளார். மேற்குவங்கம் மற்றும் மேகாலயா வழியாக சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைய சாந்த் மியா ரூ. 20,000 முதல் ரூ.25,000 வசூலித்ததாக போலீசார் தெரிவித்தனர்.சந்த் மியாவைத் தவிர, கைது செய்யப்பட்ட மற்ற வங்கதேச நாட்டவர்கள் அஸ்லம், முகமது அலி ஹுசைன், முகமது மிசான், ராடிஷ் மொல்லா, பாத்திமா அப்ரோஸ் என்பது விசாரணையில் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட ஐந்து இந்திய கூட்டாளிகளும் முகமது அனிஸ், ரஞ்சன் குமார் யாதவ், ரஹிசுதீன் அலி, ஷபீர் மற்றும் லோக்மான் அலி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக மூத்த அதிகாரி தெரிவித்தார். அவர்கள் போலி ஆதார் அட்டைகள், பிறப்பு மற்றும் சாதிச் சான்றிதழ்கள் உள்ளிட்ட பிற ஆவணங்களைத் தயாரித்து வங்கதேசத்தினர் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய உதவி செய்துள்ளனர் என்பது போலீசாரின் விசாரணையில் உறுதியானது. வங்கதேசத்தை சேர்ந்த சந்த் மியாவால் அளித்த தகவல் படி தான், சில தினங்களுக்கு முன் சென்னையில் சட்ட விரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தினர் 33 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Savitha
மே 04, 2025 11:48

6 பேர், 11பேர்?????? ஏன் சார் ,கொஞ்சமாவது நம்புற மாதிரி இருக்கா?


naranam
மே 04, 2025 02:26

வட கொரியா மாதிரி எல்லையைத் தாண்டுபவர்களை சுட்டுக் கொன்றுவிட ஆரம்பித்தால் ஒரு பய புள்ள தாண்டி இந்த பக்கம் வர மாட்டான்..


Sivagiri
மே 03, 2025 23:30

மே வ , காஷ்மீர் , அசாம் கேரளா , த நா , முழுவதும் சோதனை செய்தால்தான் , பங்களாதேஷி , பாகிஸ்தானியர் ஊடுருவிகளை , களை எடுக்க முடியும் . .


மீனவ நண்பன்
மே 03, 2025 22:31

சட்ட விரோதமாக குடியேறியவர்களில் முக்கியமான நபராக 55 வயதான சந்த் மியாவால் இருந்துள்ளார். இவர் நான்கு வயதில் இந்தியாவிற்குள் நுழைந்து போலி ஆவணங்கள் தயாரித்து வசித்து வந்துள்ளார்.ரொம்ப சுறுசுறுப்பு


Karthik
மே 03, 2025 22:10

அந்தக் கிழவனை உள்ள வச்சு ஸ்பெஷல் ட்ரீட்மென்ட் கொடுத்து கவனிச்சா இன்னும் பல பேர் பத்தின விவரங்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கு போலீசுக்கும் அலைச்சல் மிச்சம்.


muthu
மே 03, 2025 21:14

Not only in chennai entire tamilnadu Bangladesh muslims are penetrated


Nada Rajan
மே 03, 2025 21:03

எல்லையில் தடுத்து நிறுத்த வேண்டும்.


திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானஸ்கந்தன்
மே 03, 2025 20:51

யார் வேண்டுமானாலும் உள்ளே வரலாம் என்னா எல்லை பாதுகாப்பு? காசை விட்டெறிந்தால் வேண்டிய ஆவணங்கள் "வாங்கி" கொள்ளலாம். அரசியல் கட்சிகளுக்கு வேண்டியது ஓட்டு ஒண்ணுதான். ஆட்சிக் கட்டில்தான். இப்போ இங்கே எதிர்க்கட்சிகள் நாங்கள் ஆட்சியை பிடிப்போம்னுதான் "வாக்குறுதி" தருகிறார்களே ஒழிய மக்களுக்கு என்ன செய்வோம்னு எவரும் ஏதும் சொல்வதில்லை.


புதிய வீடியோ