வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இந்துமதவாத பாஜ அரசின் அலங்கோலம் நாடெல்லாம் பரவிக்கிடக்கிறது
வாரணாசி: வாரணாசியில் 100க்கும் மேற்பட்ட ஹோட்டல்கள், ஹூக்கா பார்களில் நடத்திய சோதனை நடத்திய போலீசார், கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்ட 14 பேரை போலீசார் கைது செய்தனர்.உ.பி., மாநிலம் வாரணாசியில் கடந்த மார்ச் 29 முதல் ஏப்ரல் 4 வரையிலான ஆறு நாட்களில் 19 வயது பெண் ஒருவர் 23 நபர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் அந்தப் பெண்ணுக்கு போதைப்பொருள் கொடுத்து, நகரத்தில் உள்ள பல்வேறு ஹோட்டல்களுக்கு அழைத்து சென்று மாற்றி கொண்டே இருந்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் ஏப்ரல் 6 அன்று போலீசில் புகார் அளித்தனர்.வாரணாசி தொகுதியின் எம்.பி.யான பிரதமர் நரேந்திர மோடியும் இந்த சம்பவத்தை அறிந்து, இந்த வழக்கில் கடுமையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.இதன் அடிப்படையில், போலீசார் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். நகரில் உள்ள 100க்கும் மேற்பட்ட ஹோட்டல்கள், ஹூக்கா பார்கள் சோதனை நடத்தினர்.இந்த சோதனையில் பல சந்தேக நபர்களை விசாரித்ததில் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய 14 பேரை போலீசார் இன்று கைது செய்தனர்.
இந்துமதவாத பாஜ அரசின் அலங்கோலம் நாடெல்லாம் பரவிக்கிடக்கிறது