உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹா.,வில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்

மஹா.,வில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்

புனே, மஹாராஷ்டிராவில், 21 வயது இளம் பெண்ணை, மூன்று பேர் அடங்கிய மர்ம கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மஹாராஷ்டிராவில், புனேவின் பாப்தேவ் படித்துறை அருகே 21 வயது இளம் பெண் ஒருவர், தன் ஆண் நண்பருடன் நேற்று முன்தினம் இரவு சென்றார். அப்போது அங்கு மூன்று பேர் அடங்கிய மர்ம கும்பல், அந்த பெண்ணின் நண்பரை அடித்து உதைத்ததுடன், அங்குள்ள மரத்தில் கட்டி வைத்தது. அதன்பின், மூன்று பேரும் இணைந்து அந்த பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பியோடினர். போலீசார், பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து, அப்பெண்ணின் நண்பரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து தப்பியோடிய மூன்று பேரையும் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை