கங்கை நீர் பரிசு
ஹிந்து மதத்தை பின்பற்றும் துளசிகப்பார்ட், பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்தார். சமீபத்தில் நடந்த மஹா கும்பமேளாவின்போது, திரிவேணி சங்கமத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட கங்கை நீர் அடங்கிய குடுவையை, துளசி கப்பார்டுக்கு பிரதமர் மோடி பரிசாக வழங்கினார். அப்போது கும்பமேளா குறித்தும், கங்கை நீரின் மகிமை குறித்தும் அவர் விளக்கினார்.இதைத் தொடர்ந்து அழகிய வேலைபாடுகளுடன் கூடிய மரப் பெட்டியில் வைக்கப்பட்ட துளசி மணி மாலையை பிரதமருக்கு பரிசாக வழங்கினார் துளசி கப்பார்ட். 'துளசியிடமிருந்து வழங்கப்படும் துளசி பரிசு' என, துளசி கப்பார்ட் அப்போது குறிப்பிட்டார்.