உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பொது சிவில் சட்டம்: பிரதமர் மோடி விருப்பம்

பொது சிவில் சட்டம்: பிரதமர் மோடி விருப்பம்

டேராடூன்: உத்தரகண்ட் மாநில உதய தினமான நேற்று, அதன் வெள்ளி விழா கொண்டாடப்பட்டது. டேராடூனில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசியதாவது: உத்தரகண்டின் உண்மையான சக்தி, அதன் ஆன்மிக பலம். உலகின் ஆன்மிக தலைநகராக இம்மாநிலம் விரைவில் மாறும். இங்கு, 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்த மாநிலத்தை புதிய உயரத்துக்கு கொண்டு செல்ல மாநில அரசு பாடுபடுகிறது. உத்தரகண்ட் உதயமான முதல் ஆறு மாதங்களில், 4,000 சுற்றுலா பயணியர் விமானம் வாயிலாக இங்கு வந்தனர். இப்போது, நாள்தோறும் 4,000 சுற்றுலா பயணியர் விமானம் வாயிலாக உத்தரகண்டிற்கு வருகை தருகின்றனர். கடந்த 25 ஆண்டுகளில் இங்கு பொறியியல் கல்லுாரிகளின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரித்து உள்ளது. ஒரு மருத்துவக் கல்லுாரி மட்டுமே இருந்த நிலையில், அது தற்போது 10 ஆக உயர்ந்துள்ளது. உத்தரகண்டில் நிலவிய தடைகளை ஆளும் பா.ஜ., அரசு முறியடித்துள்ளது. பொது சிவில் சட்டம், மதமாற்ற தடுப்பு சட்டம் உள்ளிட்டவற்றை மாநில பா.ஜ., அரசு தைரியமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இதை மற்ற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், உத்தரகண்ட் பா.ஜ., முதல்வர் புஷ்கர் சிங் தாமி, மாநில அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி