உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாவில் எச்சில் ஊற வைக்கும் நெய் அப்பம்

நாவில் எச்சில் ஊற வைக்கும் நெய் அப்பம்

அப்பம் என்று கூறினாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது கேரளா தான். அங்கு செய்யப்படும் 'நெய் அப்பம்' சுவையாக இருக்கும். இன்னொரு ஆச்சரியமான உண்மை என்ன என்றால், தமிழ் கடவுள் முருகனுக்கு மிகவும் பிடித்ததும் நெய் அப்பம் தான். கார்த்திகை தீபம் அன்று அனைவரது வீட்டிலும் இந்த அப்பம் செய்து முருகனுக்கு நைவேத்தியமாக படைப்பர்.நெய் அப்பம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. குழந்தைகளுக்கு ஸ்னாக்ஸ் ஆகவும் செய்து கொடுக்கலாம். இதை சாப்பிடும் குழந்தைகள் மறுபடியும் கேட்டு கேட்டு வாங்கிச் சாப்பிடுவர். பெரியவர்கள் நாவில் எச்சில் ஊற வைக்கும் வகையில் நெய் அப்பம் இருக்கும்.இதை எப்படி செய்வது என்பதை பார்க்கலாமா?

தேவையான பொருட்கள்

l அரிசி மாவு - ஒரு கப்l கோதுமை மாவு - முக்கால் கப் l துருவிய வெல்லம் - அரை கப்l துருவிய தேங்காய் - அரை கப் l ஏலக்காய் பவுடர் - ஒரு டீஸ்பூன்l உப்பு - ஒரு சிட்டிகை l நெய் - கால் கப் l சமையல் சோடா - சிறிதளவு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் துருவிய வெல்லம் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரையும் வரை கொதிக்க விடவும். இன்னொரு பாத்திரத்தில் அரிசி மாவு, கோதுமை மாவு சேர்த்து கலந்து கொள்ளவும்.அதனுடன் துருவிய தேங்காய், உப்பு, கரைத்து வைத்துள்ள வெல்லம், பேக்கிங் சோடா சேர்த்து, இட்லி மாவு பதத்திற்கு கலந்து வைத்துக் கொள்ளவும். பணியார கல்லில் நிறைய நெய் ஊத்தி, அடுப்பில் மிதமான தீயில் வைத்து காய விடவும்.ஒவ்வொரு குழியிலும் முக்கால் அளவிற்கு மாவு ஊற்றவும்; வெந்ததும் திருப்பி விடவும். இருபுறமும் நன்றாக வெந்தவுடன் எடுத்து விடவும். சூடான, சுவையான நெய் அப்பம் தயார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ