உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜிப்லி படங்கள் ஜாக்கிரதை பயனர்களுக்கு எச்சரிக்கை

ஜிப்லி படங்கள் ஜாக்கிரதை பயனர்களுக்கு எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பணஜி: 'ஜிப்லி' எனப்படும் அனிமேஷன் படங்களை உருவாக்கி பயன்படுத்துவோர் நம்பகமான ஏ.ஐ., தளங்களை மட்டும் பயன்படுத்தும்படி, சமூக வலைதள பயனர்களுக்கு கோவா போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.புகைப்படத்தை, ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு செயலிகள் மற்றும் இணையதளங்களின் உதவியுடன் நொடிப்பொழுதில் அனிமேஷன் படங்களாக மாற்றுவது தற்போது டிரெண்ட் ஆகி உள்ளது.இதை, 'ஜிப்லி' படங்கள் என்று அழைக்கின்றனர். 'ஜிப்லி' என்ற பெயர் ஜப்பானிய அனிமேஷன் நிறுவனமான, 'ஸ்டூடியோ ஜிப்லி'யிலிருந்து வந்தது.'ஜிப்லி ஆர்ட்' தற்போது இணையத்தில் டிரெண்ட் ஆக இருப்பதற்கு முக்கிய காரணம், ஓபன் ஏ.ஐ., நிறுவனத்தின் சாட் ஜிபிடி செயலி வாயிலாக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பட உருவாக்க அம்சமாகும். கடந்த மார்ச் மாதத்தில், இதன் நான்காவது பதிப்பில் இந்த அம்சம் சேர்க்கப்பட்டது. இது, பயனர்கள் தங்கள் புகைப்படங்களை ஸ்டூடியோ ஜிப்லி பாணியிலான அனிமேஷன் படங்களாக மாற்ற அனுமதிக்கிறது. இதன் எளிமை, பயனர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.இந்நிலையில், ஜிப்லிக்காக படங்களை இணையதளங்களில் பதிவேற்றம் செய்பவர்களுக்கு கோவா போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. பல ஏ.ஐ., செயலிகள் தனிப்பட்ட படங்களை கசியவிடும் வாய்ப்பு இருப்பதால், நம்பகமான ஏ.ஐ., செயலிகள் மற்றும் இணையதளங்களில் மட்டும் தனிப்பட்ட படங்களை பயன்படுத்தும்படி போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kasimani Baskaran
ஏப் 03, 2025 03:53

சாட்ஜிபிடி புதுப்புது சிக்கல்களை உருவாக்குவதில் நிபுணத்துவம் பெற்று இருக்கிறார்கள்...


புதிய வீடியோ