உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எலி மருந்து பேஸ்டில் பல் துலக்கிய சிறுமி பலி

எலி மருந்து பேஸ்டில் பல் துலக்கிய சிறுமி பலி

பாலக்காடு:பாலக்காடு அருகே எலி மருந்து பேஸ்டை பயன்படுத்தி பல் துலக்கியதால், 3 வயது சிறுமி உயிரிழந்தார்.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடி ஜெல்லிப்பறை ஒம்மலை பகுதியைச் சேர்ந்த லிதின் - -ஜோமரியா தம்பதியின் 3 வயது மகள் நேஹா ரோஸ். பிப்., 21ல் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி, எலி மருந்து பேஸ்டை எடுத்து, தவறுதலாக பல் துலக்கியுள்ளார். இதைக்கண்ட பெற்றோர், சிறுமியை உடனடியாக, கோட்டயம் மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு சிகிச்சையில் இருந்த சிறுமி, நேற்று முன்தினம் திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீசித்ரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

தமிழன்
மார் 16, 2025 03:08

கொஞ்சமாவது அறிவு வேண்டாமா?? குழந்தை உள்ள வீட்டில் ஆபத்தான பொருட்களை குழந்தை கைக்கு கிடைக்கும் வகையிலா வைப்பார்கள்?? என்ன ஆத்தாகாரி டிவியில் சீரியல் பார்த்துக் கொண்டிருந்தாளா??


முக்கிய வீடியோ