உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உலகளாவிய பணியாளர் தேவையை புறக்கணிக்க முடியாது: ஜெய்சங்கர்

உலகளாவிய பணியாளர் தேவையை புறக்கணிக்க முடியாது: ஜெய்சங்கர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: எச் 1பி விசா கட்டணம் உயர்விற்கு மத்தியில், ''உலகளாவிய பணியாளர்களின் தேவையை புறக்கணிக்க முடியாது'' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறைமுகமாக கூறியுள்ளார்.வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் பணியாற்றுவதற்காக வழங்கப்படுகிறது, எச்1பி விசா. இதை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் உள்ளது. சமீபத்தில் இந்த விசாவுக்கான கட்டணத்தை, 88 லட்சம் ரூபாயாக உயர்த்தி, அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். இதனால் இந்தியர்களுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.இந்நிலையில் நியூயார்க்கில் நடந்த நிகழ்ச்சியில் ஜெய்சங்கர் பேசியதாவது: ஒரு யதார்த்தம் உள்ளது. இந்த யதார்த்தத்திலிருந்து நீங்கள் தப்பிக்க முடியாது. பல நாடுகள் தங்கள் சொந்த மக்களிடமிருந்து தொழிலாளர் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது. உலகளாவிய பணியாளர்களின் தேவையை புறக்கணிக்க முடியாது. இவ்வாறு ஜெய்சங்கர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

ஜெய்ஹிந்த்புரம்
செப் 27, 2025 09:38

வேலைக்காரங்களை தயாரிக்காம முதலாளிகளை தயாரிக்க முயலுங்கள் அமைச்சரே வாய்லே மட்டும் வடையை சுட வேண்டாம்ன்னு சொல்லி வைங்க


Sasikumar Babu
செப் 27, 2025 01:54

Skilled workers from developing countries before going to Advanced or Highly Developed countries can work with NRIs who have settled in India. Communication skills, soft skills etc can become perfect only after sincere practice.


Sekar
செப் 26, 2025 18:29

வெளிநாடுகளில் பணி செய்ய வேண்டும் என்ற மனநிலை மாறவேண்டும். இந்தியாவில் இந்தியர்கள் தொழில் முனைவோர்களாக முன்வர வேண்டும். புதிய தொழில் முனைவோர்கள் பயம் நீக்கி செயல்படுத்திட மத்திய மாநில அரசுகள் வழிவகைகளை எளிமை படுத்திட வேண்டும்.


zahirhussain
செப் 26, 2025 12:00

அமெரிக்கா மட்டுமல்ல, உலகின் அதிக நாடுகளில் இந்தியர்கள் தேவை அதிகமாக உள்ளது இன்னும் எத்தனை தொழிநுட்பங்கள் வந்தாலும் இந்தியர்கள் இல்லாமல் சீக்கிரம் முன்னேறுவது என்பது சந்தேகம்தான் அமெரிக்க அதிபரின் பதவிக்காலம் முடியும்வரை இந்தியர்கள் காத்திருந்தால் சிறப்பான எதிர்காலம் அமைய வாய்ப்புகள் அதிகம்


Vasan
செப் 26, 2025 11:45

திரு. ஜெய்சங்கர் ஐயா, உங்கள் சேவையை பாராட்டி, நுங்கம்பாக்கத்தில் உள்ள காலேஜ் ரோடு க்கு தங்கள் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதாவது, அந்த சாலை, இன்று முதல், ஜெய்சங்கர் சாலை என்று அழைக்கப்படும். தமிழக அரசுக்கும், முதல்வர் ஸ்டாலின் க்கும் மிக்க நன்றி. பிஜேபி க்கும் திமுக விற்கும், கொள்கை ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் கருத்து வேறுபாடு இருந்தாலும், அதை பொருட்படுத்தாமல், உங்களை கௌரவிக்கும் தமிழக முதல்வரை எவ்வளவு பாராட்டினாலும் போதாது. 2026 மட்டுமல்ல, பின்வரும் தேர்தல்களிலும் திமுக வெற்றி பெற வாழ்த்துக்கள். வாழ்க திரு ஸ்டாலின். வாழ்க திமுக. வாழ்க தமிழக அரசு. வாழ்க தமிழகம். வாழ்க ஒன்றிய அரசு. வாழ்க பாரதம்.


Rathna
செப் 26, 2025 14:07

கருணாநிதியின் நண்பர்.


KavikumarRam
செப் 26, 2025 14:14

இது என்னடா புது புரளியா இருக்கு, . இந்த மாதிரி இந்த நாட்டை விட்டு அகலவேண்டும்.


Suppan
செப் 26, 2025 14:55

நன்றாகப்பாருங்கள். இது நடிகர் ஜெய்சங்கர் ஆக இருக்கலாம்


ஜெய்ஹிந்த்புரம்
செப் 28, 2025 00:17

நக்கல்யா ஒனக்கு


Informed Critic, Kongunadu, Bharat, Hindustan
செப் 26, 2025 11:00

ஆனால் வறுமையில் உழலும் சிரியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வட ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து புலம்புயரும் மக்களாலும், பாலஸ்தீன ஆதரவு கோஷ்டிகளின் தீவிர ஆர்பாட்டங்கள், வன்முறைகளால் மேற்கத்திய நாடுகளில் அந்நியர்களுக்கு எதிரான மனநிலை ஏற்பட்டுள்ளது. எதிர்பாராத விதமாக எந்த பிரச்சனைகளிலும் ஈடுபடாத இந்தியர்களுக்கு எதிராகவும் அது திரும்பியுள்ளது. இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினர் எவருமே வேண்டாம் என்ற மண்ணின் மைந்தர்கள் மனநிலை ஏற்பட்டு வருகிறது. மற்ற நாட்டினர் மேற்கத்திய வளத்தை சுரண்டுகிறார்கள் என்ற எண்ணத்துடன், இந்தியர்கள் தங்களின் வேலைவாய்ப்புகளை பறித்துக்கொள்கிறார்கள் என்ற எண்ணம் பரவலாக ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக இந்தியர்களுக்கு வெளிநாடுகளில் இனி வரவேற்பு குறைவாகவும், எதிர்ப்பு அதிகமாகவும் இருக்கும் என்றே தோன்றுகிறது. இனி சீனா போன்று தற்சார்பு ஒன்றே இந்தியாவை காப்பாற்றும் என்பது நிதர்சனம். இந்தியர்களின் உழைப்பால் அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா, ஆத்திரேலியா, சவுதி அரேபியா, குவைத், எமிரேட்ஸ் போன்ற நாடுகள் முன்னேறிய காலம் முடிவுக்கு வந்து இந்தியர்களின் உழைப்பால் இந்தியா உயரும் நாள் வெகு தொலைவில் இல்லை.


karan
செப் 26, 2025 10:55

trump doing for his country.


sivakumar Thappali Krishnamoorthy
செப் 26, 2025 10:51

கல்வியில் சிறந்து விளங்கும் இந்தியா இளைஞர் களின் சிந்தனை திறன் மட்டுறும் செயலாற்றும் யுக்தி பெருமைக்கு உரியது. அதை இந்தியாவின் வளர்ச்சி திட்டங்களுக்கும் செயல் படுத்தும் விஷயத்தில் மத்திய அரசு ஆவண செய்ய வேண்டும். கமிஷன் , corruption மட்டுறும் இட ஒதுக்கீடு முறையை ஒழித்தாலே போதும்


Informed Critic, Kongunadu, Bharat, Hindustan
செப் 26, 2025 11:03

கமிஷன், கரப்ஷன், கலெக்ஷன், ரிசர்வேஷன் இந்த நாலும் திராவிட மாடலின் நான்கு தூண்கள். இவற்றை அழித்தால் மட்டுமே தமிழகமும், இந்தியாவும் முன்னேறும்.


Chandru
செப் 26, 2025 10:05

Jealousy has no season or reason.


அப்பாவி
செப் 26, 2025 09:46

எத்தனை நாள்தான் பணியாளராவே இருப்பீங்க? சீக்கிரம் நாலு அமெரிக்கா ஆளுங்களுக்கு பாரத் விசா குடுங்க.


ஜெய்ஹிந்த்புரம்
செப் 28, 2025 00:20

இந்த வடை சுட்டு ரொம்ப வருசமாகி ஊசிப் போய் விட்டது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை