உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வடகிழக்கு மாநிலங்களுக்கு போங்க; அமைச்சர்களுக்கு மோடி கறார் உத்தரவு

வடகிழக்கு மாநிலங்களுக்கு போங்க; அமைச்சர்களுக்கு மோடி கறார் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சமீப காலமாக, வடகிழக்கு மாநிலங்கள் குறித்த செய்திகள் அதிகம் அடிபடுகின்றன; அங்கு பல நல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. பிரதமர் உட்பட பல அமைச்சர்களும், அடிக்கடி இந்த மாநிலங்களுக்கு செல்கின்றனர்.திடீரென, வடகிழக்கு மாநிலங்களுக்கு அமைச்சர்களின் வீசிட்'டிற்கு என்ன காரணம்? 'நம் வடகிழக்கு மாநிலங்களில், இயற்கை வளம் அதிகம்; கண் குளிர காண வேண்டிய நிறைய சுற்றுலாத் தலங்கள் உள்ளன. அத்துடன், சீனா, மியான்மர், வங்கதேசத்தோடு நம் எல்லை இந்த மாநிலங்களில் அமைந்துள்ளன. எனவே, அடிக்கடி இங்கு மத்திய அமைச்சர்கள் செல்ல வேண்டும் என, பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்' என்று பா.ஜ.. வட்டாரங்களில் கூறுகின்றனர்.சமீபத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மேகாலயாவிற்கு சென்று, பல நலத்திட்டங்களை துவக்கி வைத்தார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அசாம், மிசோரம் போன்ற மாநிலங்களுக்கு சென்று வந்தார்; தற்போது மீண்டும் செல்ல இருக்கிறார். பிரதமர் அலுவலகத்திலிருந்து, எந்த அமைச்சர், எந்த வடகிழக்கு மாநிலத்திற்கு செல்ல வேண்டும் என, ஒரு பட்டியலே தயார் செய்யப்பட்டு, சம்பந்தப் பட்டவர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

nisar ahmad
ஜூலை 20, 2025 13:00

ஆமாம்


சிகண்டி ரங் aka ஆரியா ப்பசங்க
ஜூலை 20, 2025 08:34

இவர் மட்டும் வடகிழக்கு மாநிலங்களுக்கு ஏன் போகமாட்டாராம்?? அதிலும் குறிப்பா மணிப்பூருக்கு ???


திராவிடா பய்யன்
ஜூலை 20, 2025 09:11

இவர் மட்டும் கள்ளக்குறிச்சி, வேங்கை வயல் போக மாட்டாராம், வெறும் சாரி மட்டும் தருவாரம்...


rajan
ஜூலை 20, 2025 07:27

அமைச்சர்களே நீங்க போங்க, ஆனால் நான் வரமாட்டேன்