உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கடவுளின் ஆசிர்வாதம் மோடி!

கடவுளின் ஆசிர்வாதம் மோடி!

நம் நாட்டுக்கு கடவுள் தந்த ஆசிர்வாதம் தான் மோடி. ஒருபுறம், பலமான, வளமான இந்தியாவை உருவாக்கி வருகிறார்; மறுபுறம் பெண்கள், ஏழைகள் மற்றும் இளைஞர்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கிறார்.சிவ்ராஜ் சிங் சவுகான், ம.பி., முன்னாள் முதல்வர், பா.ஜ.,

அரசியலாக்க விரும்பவில்லை!

ராமர் கோவில் கும்பாபிஷேகம் குறித்து கருத்து கூறி, அந்த விழாவை அரசியலாக்க விரும்பவில்லை. இது, முதல் கும்பாபிஷேகமோ, கடைசி கும்பாபிஷேகமோ அல்ல. கடந்த காலங்களிலும் இது போன்ற விழாக்களை பார்த்துள்ளோம்.ஒமர் அப்துல்லா, தலைவர், தேசிய மாநாட்டு கட்சி

முக்கியத்துவம் தெரியாதவர்!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேர்தலுக்காக மத்திய அரசு காட்டும் வித்தை தான் ராமர் கோவில் கும்பாபிஷேகம் என கூறியுள்ளார். ராமர் கோவிலுக்காக எந்தவித தியாகமும் செய்யாதவர்களுக்கு, அதன் முக்கியத்துவம் தெரியாது.கேசவ் மவுரியா, உ.பி., துணை முதல்வர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ