உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒடிஷாவில் தங்கச்சுரங்கம் கண்டுபிடிப்பு: 20,000 கிலோ கிடைக்க வாய்ப்பு

ஒடிஷாவில் தங்கச்சுரங்கம் கண்டுபிடிப்பு: 20,000 கிலோ கிடைக்க வாய்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி:ஒடிஷாவில், 20,000 கிலோ வரை தங்கம் கிடைக்கும் சுரங்கங்கள் இருப்பதை இந்திய புவியியல் ஆய்வு மையம் கண்டறிந்துள்ளது. ஒடிஷாவின் பல்வேறு மாவட்டங்களில் கனிமவள திட்டங்களுக்கான பணிகளில், இந்திய புவியியல் ஆய்வு மையம் ஈடுபட்டது. அப்போது தியோகர், சுந்தர்கர், நபாரங்பூர், கியோன்ஜார், அங்குல் உள்ளிட்ட மாவட்டங்களில் தங்கச் சுரங்கங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக மயூர்பன்ஞ், மல்கன்கிரி, சாம்பல்பூர் மற்றும் பவுத் ஆகிய இடங்களில் சுரங்கங்கள் தோண்டி, தங்கத்தை வெட்டி எடுக்கும் பணிகள் துவங்கியுள்ளன. இதை, அம்மாநில சட்டசபையில் சுரங்கத் துறை அமைச்சர் விபூதி பூஷண் ஜெனா உறுதிபடுத்தியுள்ளார். தங்கச் சுரங்கங்களில் எவ்வளவு தங்கம் இருக்கும் என்ற தகவல் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. எனினும், 20,000 கிலோ வரை தங்கம் இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டில், 7 முதல் 8 லட்சம் கிலோ வரையிலான தங்கத்தை வெளிநாடுகளில் இருந்து நாம் இறக்குமதி செய்துள்ளோம். அதை ஒப்பிட்டு பார்க்கும்போது, தற்போது கண்டறியப்பட்ட தங்கச் சுரங்கங்கள் மூலம் உள்நாட்டின் தேவையை பூர்த்தி செய்வது கடினம். எனினும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான கதவுகளை இந்த தங்கச் சுரங்கங்கள் திறந்து விட்டிருக்கின்றன. ஏற்கனவே, 96 சதவீத குரோமைட், 52 சதவீத பாக்ஸைட், 33 சதவீத இரும்பு தாதுக்கள் ஒடிஷாவில் இருந்தே வெட்டி எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது, தங்கமும் அங்கிருந்து வெட்டி எடுக்கப்பட்டால், கனிமவள ஏற்றுமதியில் ஒடிஷா முக்கிய மாநிலமாக திகழும். கர்நாடகாவின் கோலார் தங்க வயலில், 121 ஆண்டுகளில், 10 லட்சம் கிலோ தங்கம் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

DINAKARAN THAKKU SUBBURAM
ஆக 19, 2025 11:54

DINAKARAN THAKKU SUBBURAM


அயோக்கிய திருட்டு திராவிடன்
ஆக 18, 2025 13:47

நல்ல வேளை திருட்டு திராவிட அயோக்கியர்களிடம் கிடைத்திருந்தால் அது அதோ கதி தான்.எப்படியெல்லாமோ ஆட்டைய போட்டு இருப்பார்கள் திருட்டுத்தனத்தை அகில இந்தியாவிலும் செய்யச் சொல்லி திருட்டு திராவிட மாடல் என்ற பெயரும் கொடுத்து விட்டார்கள்


nisar ahmad
ஆக 18, 2025 11:36

பஜகவுக்கு நல்ல வேட்டை மொத்தத்தையும் லவட்டிக்கொண்டு விடும் கட்சியின் சொத்து கூடி இந்தியாவில் இருக்கும் மற்ற கட்சிகளையும் ஆட்டைய போடலாம் அவர்கள் செய்யும் எந்த ஊழலுக்கும் யாருக்கும் பதில் சொல்வதிலையே பி எம் கேர் போல நாசூக்காகவுவே தைரியமாகவும் ஊழல் செய்வதில் வல்லவர்களாயிற்றே.


R SRINIVASAN
ஆக 18, 2025 09:46

இந்தியா முன்னேற 10 வழிகள். 1. தங்கம்,வெள்ளி போன்றவைகளின் மீதுள்ள மோகம் அழிய வேண்டும். 2. திருமணம், பிறந்தநாள் விழா போன்றவைகளை எளிமையாக கொண்டாட வேண்டும். 3. கூடியவரை இந்த விழாக்களை நெருங்கின சொந்தங்களை அழைத்து கொண்டாட வேண்டும். 4. இந்த விழாக்களில் உணவை buffe முறையில் வழங்கலாம். 5. ஒரு வீட்டில் 10 பேர் இருந்தால் ஒவ்வுருவரும் உழைத்து சம்பாதிக்க வேண்டும். 6. பெண்களாயிருந்தால் தையல் கலை, உணவு சமைத்தல், வசதியில்லாத மாணவ மாணவிகளுக்கு கல்வியை டியூஷன் எடுத்து போதித்தல், புடவை முதலியவைகளுக்கு டிசைனிங் செய்தல் போன்றவைகளை வீட்டிலிருந்தபடியே சொல்லிக் கொடுத்தல், இசையை பயித்ரு வித்தல் போன்ற வழிகளில் சம்பாதிக்கலாம். 7. ஒரு குடும்பத்திற்கு ஒரு வீடு என்ற அளவில் நிறுத்திக்கொள்ள வேண்டும். 8. கூடிய வரையில் கூட்டுக்குடும்பமாக வாழ வேண்டும். 9. வீட்டிலுள்ள பெரியவர்கள் தங்களுடைய அனுபவத்தை பகிர்ந்து சிறியவர்களை வழி நடத்தி செல்ல வேண்டும். 10. சிறியவர்கள் பெரியவர்களின் சொற்களில் உள்ள உண்மைத் தன்மையை உணர்ந்து அதை பின்பற்ற வேண்டும்.


Narahari
ஆக 18, 2025 07:32

ஓடிசாவில் அது பாதுகாப்பாகக் காப்பாற்றப்படுகிறது. இங்கே அதே மரியாதையுடன் பாதுகாக்கப்படுமா என்ற கவலை இருக்கிறது.


சந்திரன்
ஆக 18, 2025 07:15

ஒன்னுத்துக்கும் உதவாத மண் என்றால் அது பெரியார் மண்


xyzabc
ஆக 18, 2025 07:09

நல்ல வேலை இது திராவிட நாட்டில் கண்டு பிடிக்கப்படவில்லை.


N.Purushothaman
ஆக 18, 2025 06:57

இருபது டன் தங்கத்தை வெட்டி எடுக்க ஆகும் செலவையும் கருத்தில் கொண்டால் தான் அது லாபமா அல்லது நஷ்ட மா என தெரிய வரும் .


சமீபத்திய செய்தி