உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தங்க கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவுக்கு ரூ.102 கோடி அபராதம்

தங்க கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவுக்கு ரூ.102 கோடி அபராதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: 127 கிலோ தங்க கடத்தல் வழக்கில் கர்நாடகாவை சேர்ந்த நடிகை ரன்யாவுக்கு வருவாய் புலனாய்வுத்துறை ரூ.102 கோடி அபராதம் விதித்தது. அபராதத்தை செலுத்தாவிட்டால் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.கன்னட நடிகை ரன்யா ராவ், துபாயில் இருந்து 127 கிலோ தங்கம் கடத்தி வந்த வழக்கில் வருவாய் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டார். கடந்த மார்ச் 4ல் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ள நடிகைக்கு, வருவாய் புலனாய்வுத்துறை சிறையிலேயே நோட்டீஸ் வழங்கியது. அவருக்கு 102 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ogmdqzln&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவரது கூட்டாளியான டி.கே.ராஜூ 72 கிலோ தங்கம் கடத்திய நிலையில், அவருக்கு ரூ.62 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.குறிப்பிட்ட காலத்திற்குள்ள அபராதம் செலுத்தாவிட்டால், சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்.இந்த வழக்கில் சஹில் ஜெயின் மற்றும் பரத் ஜெயின் தலா 63.61 கிலோ தங்கம் கடத்தியது தெரியவந்துள்ளது. அவர்கள் இருவருக்கும் தலா ரூ.53 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.நான்கு பேருக்கும் சேர்த்து மொத்தமாக ரூ.270 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குடன் தொடர்புடைய காபிபோசா மனு ஹைகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கு செப்டம்பர் 11ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

V Venkatachalam
செப் 03, 2025 09:13

இந்த த்ராவிஷம் பாருங்க ரொம்ப அப்பாவியா இருக்காருங்க.


V Venkatachalam
செப் 03, 2025 09:12

ஓகே ஓகே. இதே போல அரசியல் வியாதிகளுக்கு பெருங் கொள்ளை காரனுக்கு அவனுக்கு இருக்கிற கண்ணுக்கு தெரிஞ்ச சொத்து மதிப்புக்கு நிகரான அபராதம் விதித்து சொத்தை பிடுங்கி அரசு கஜானாவில் சேர்த்தால் அரசியல் வியாதிங்க அடிக்கிற கொள்ளையை பெருமளவுக்கு தடுக்கலாம். ஆனா அரசியல் வியாதிங்களுக்கு கோர்ட் வரைக்கும் பயம் இருக்குதே. கரையான்களை எப்புடி யாவது ஒழித்து கட்டணும்.


Kasimani Baskaran
செப் 03, 2025 04:16

கேரள தங்க மங்கை வெறும் ஐந்து கிலோ கடத்தியதாக பிடிபட்டார்... அவர் என்ன ஆனார் என்று தெரியவில்லை. மொத்த கேரளாவையும் மதம் மாற்ற முயன்ற அவருடன் தொடர்பில் இருந்து பெரும்புள்ளிகள் தப்பித்து விட்டார்கள்.


Natarajan Ramanathan
செப் 02, 2025 23:17

இந்தமாதிரி சிக்கலில் மாட்டும் நடிகைகளுக்கு பணிவிடை செய்வதற்கு என்றே சிவப்பு பூதம் பாலிடாயில் என்ற பெயரில் ஒருவன் இருக்கிறானே?


Thravisham
செப் 03, 2025 06:49

யாரு


வாய்மையே வெல்லும்
செப் 02, 2025 22:46

மூன் பிக்ச்சர்ஸ் ல ஒரு இருபது படம் நடிம்மா.. உனக்கு இருநூறு கோடி கண்டிப்பா கிடைக்கும் . வீடு அடமானம் ஜப்தி நடக்காது. இது நடுஜாமம் மூன் பிக்ச்சர்ஸ் மீது ஆணை. தொல்லை பிடிச்சநிதியை உடனே அணுகவும் எல்லாம் ஓகே ஓகே ..


Ganapathy
செப் 02, 2025 21:46

அருமையான தீர்ப்பு...ஆனா உச்சநீதிமன்றம் குறுக்கே புகுந்து கெடுக்காம இருக்கணும்..அவனுகளுக்கு யாருக்காவது ஜாமீன் கொடுகலேன்னா தினமும் தூக்கமே வராதே...


புதிய வீடியோ