உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விடைபெறுகிறது 2024; வருக...! வருக...! 2025; சிறப்பு டூடுல் வெளியிட்டது கூகுள்!

விடைபெறுகிறது 2024; வருக...! வருக...! 2025; சிறப்பு டூடுல் வெளியிட்டது கூகுள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '2024ம் ஆண்டு இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், கூகுள் சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது. 2024ம் ஆண்டு இன்றோடு முடிகிறது. இன்றுதான், வார கடைசி நாள், மாத கடைசி நாள், வருடத்தின் கடைசி நாள் ஆகும். கூகுள் நிறுவனம் அவ்வப்போது பிரபல ஆளுமைகளின் பிறந்தநாள், பண்டிகை நாட்கள், முக்கிய தினங்கள் போன்ற நாட்களில் சிறப்பு டூடுலை வெளியிடுவது வழக்கம். இந்த நிலையில் இன்று இரவு 12 மணியுடன் 2024ம் ஆண்டு நிறைவடைந்து, நாளை 2025வது ஆங்கில புத்தாண்டு பிறக்க உள்ளது. இந்தாண்டு டூடுலில், கூகுள் நிறுவனம் 2024ம் ஆண்டை நினைவுக் கூர்ந்துள்ளது. இருண்ட வானத்தின் பின்னணியில் தடிமனான எழுத்துகளில் 'கூகுள்' என எழுதப்பட்டுள்ளது.குறிப்பாக 'ஓ' என்ற எழுத்து நள்ளிரவு 12 மணியை குறிக்கும் வகையில் கடிகாரத்தின் முள் இருக்கிறது. 2025ம் ஆண்டில் பிரகாசமாக இருப்போம். புதிய வாய்ப்புகள் நிறைந்த துவக்கமாக இருக்கட்டும் என்பதை குறிக்கிறது. வரும் 2025ம் ஆண்டு சிறப்பாக அமையட்டும் என்ற அனைவரது எதிர்பார்ப்பையும் குறிப்பிடுவது போல் இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Matt P
டிச 31, 2024 23:51

நமது புத்தாண்டு நமது மொழியின் அடையாளமாயினும், உலகத்திலுள்ள அத்தனை பேரும் இங்கிலீஷு நாட்காட்டியை பயன்படுத்தும் அவசியத்தில் இருக்கிறோம். இங்கிலீஷு மொழி உலகத்திலுள்ள அத்தனை மக்களையும் இணைக்கிறது. இன்றைக்கு எத்தனை பேருக்கு தமிழ் நாள் இன்ன நாள் என்று தெரியும். இங்கிலீஷு நாளை கேட்டால் உடனே சொல்லி விடுவார்கள். அதுவும் வெளிநாட்டுக்கு வந்துவிட்டால் இங்கிலீஷு நாட்காட்டியை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டிய அவசியம். இந்த நாள் உலக மக்கள் அத்தனை பேரையும் ஒரே நாளில் கொண்டாட வைக்கும் நாள். இந்த மாதத்திலே தமிழ் தை மாதமும் வருகிறது. தை பிறந்தால் வழிபிறக்கும். எல்லோருக்கும் கனிவான இனிய இங்கிலீஷு புத்தாண்டு வாழ்த்துக்கள்.


Ganesh
டிச 31, 2024 13:51

நான் என்னுடைய கிரிஷ்துவ நண்பருடன் பேசும் போது தான் ஆங்கில புத்தாண்டு என்பது இயேசு வின் பிறந்தநாள் குறிப்பது ஆகும்... அதாவது இதை தான் AD மற்றும் BC என்று நாம் சொல்கிறோம்...... ஆகையால் நம்முடைய கிறிஸ்துவ நண்பர்களுக்கு தான் இது புது வருட பிறப்பு....


V வைகுண்டேஸ்வரன்
டிச 31, 2024 11:00

கூகுள் டூடில் படு கண்ராவியாக, அபசகுனம் மாதிரி, பேய் பிசாசுகளின் வடிவத்தில், அசிங்கமாக இருக்கிறது.


ஆரூர் ரங்
டிச 31, 2024 10:21

எந்த ஆங்கிலேயராவது தமிழ்ப்புத்தாண்டு யுகாதி அல்லது விஷுவைக் கொண்டாடுகிறாரா? இன்னும் நாம் காலனி அடிமைத்தன மனப்பான்மையிலிருந்து விடுபடவில்லை என்பதன் அடையாளம் இந்த ஆங்கிலப் புத்தாண்டு குடித் திருவிழா.


முக்கிய வீடியோ