உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குஜராத்தில் ரோப்கார் கயிறு அறுந்து விபத்து: 6 பேர் பலியான சோகம்

குஜராத்தில் ரோப்கார் கயிறு அறுந்து விபத்து: 6 பேர் பலியான சோகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆமதாபாத்: குஜராத்தில் உள்ள மலைக்கோவிலில், ரோப்கார் கயிறு அறுந்து விழுந்ததில் 6 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.குஜராத்தின் பாவகத்தில் உள்ள மலை உச்சியில் புகழ்பெற்ற கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு செல்ல 2000 படிக்கட்டுகள் வழியாக செல்ல வேண்டும். அல்லது ரோப் கார் மூலம் செல்ல வேண்டும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கோவிலுக்கு சென்று வருகின்றனர்.அவ்வாறு இந்த மலை கோவிலுக்கு ரோப்காரில் பக்தர்கள் சென்று கொண்டிருந்தபோது இன்று பிற்பகல் 3.30 மணி அளவில் ரோப்கார் கயிறு அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் மாவட்ட கலெக்டர் விரைந்தனர்.இந்த சம்பவம் குறித்து பஞ்சமஹால் கலெக்டர் கூறியதாவது:ரோப்வே வழியாக மக்கள் கோவிலை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது. ரோப்கார் கயிறு அறுந்து விழுந்ததில் 2 லிப்ட்மேன்கள், 2 தொழிலாளர்கள் மற்றும் இருவர் என 6 பேர் உயிரிழந்தனர்.சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும் உள்ளூர் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விபத்துக்குப் பிறகு மீட்பு நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டன, மேலும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உதவி வழங்குவதாக நிர்வாகம் உறுதியளித்தது.விபத்து குறித்து நிர்வாகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.இவ்வாறு கலெக்டர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

அப்பாவி
செப் 07, 2025 10:52

நேரு கட்டினதாக்கும்.


அப்பாவி
செப் 07, 2025 06:56

யே ஹை டபுள் இஞ்சின் சர்க்கார் கா சாதனை...


Kasimani Baskaran
செப் 07, 2025 06:51

ஆழ்ந்த இரங்கல்கள். பராமரிப்பு தொய்வில்லாமல் இருப்பது பொது மக்களின் பாதுகாப்புக்கு மிக அவசியம். சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கைது செய்து விசாரிக்க வேண்டும்.


Srinivasan s
செப் 06, 2025 22:54

poor maintenance, in North India all these things are maintained very poorly


Tamilan
செப் 06, 2025 22:47

மோடியின் முந்தைய பாஜ அரசும் இன்றைய பாஜ அரசும் இப்படித்தான் மாநிலத்தை சீரழித்துவைத்துள்ளன


Raja k
செப் 06, 2025 21:42

விடியா திராவிட கட்சியின் அவலம் பாரீர், கோவில்காசை கொள்ளையடிக்க தெரியுது, ரோப்கார் எப்படி போனால் என்ன


sultan
செப் 06, 2025 20:27

அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும் .


sultan
செப் 06, 2025 20:20

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா??


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை