இரவு பணியில் பெண்கள் அரசு அனுமதி
புதுடில்லி,:தொழிலாளர் நலத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'கூடுதல் நேரம் வேலையாள் பணியாற்றினால், வாரத்தில் அதிகபட்சம், 48 மணி நேரத்திற்கு, இரண்டு மடங்காக, கூடுதல் நேரத்திற்கான சம்பளம் வழங்கப்பட வேண்டும் . 'அதுபோல, பெண் களை இரவு நேரங்களில் கடைகள், வர்த்தக நிறுவனங்களின் பணியமர்த்தினால், அவர்களின் பாதுகாப்பு, போக்குவரத்து போன்றவற்றை நிறுவனங்களே பார்த்துக் கொள்ள வேண்டும்' என கூறப்பட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில், இரவு நேரங்களில் பெண்கள் பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தலைநகர் டில்லியில் இப்போது தான் அதற்கான அனுமதி வழங்கப் பட்டுள்ளது.