உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரேஷன் மோசடிகளால் அரசுக்கு ரூ.69,000 கோடி!இழப்பு 2,000 கோடி கிலோ அரிசி, கோதுமை மாயம்

ரேஷன் மோசடிகளால் அரசுக்கு ரூ.69,000 கோடி!இழப்பு 2,000 கோடி கிலோ அரிசி, கோதுமை மாயம்

புதுடில்லி : ரேஷன் எனப்படும் பொது வினியோக முறையின் கீழ் மக்களுக்கு வழங்குவதற்காக மத்திய அரசு அனுப்பும் 2,000 கோடி கிலோ அரிசி மற்றும் கோதுமை, பயனாளிகளை சென்றடைவதில்லை. இதனால், மத்திய அரசுக்கு ஆண்டுக்கு 69,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது என, ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=k5fasnyz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0உலக அளவில் மிகப்பெரிய ரேஷன் முறை நம் நாட்டில் நடைமுறையில் உள்ளது. இதன் வாயிலாக, 81.4 கோடி மக்களுக்கு அரிசி மற்றும் கோதுமை இலவசமாக வழங்கப்படுகின்றன.ரேஷன் முறையில் ஏழை, எளிய மக்களுக்கு அரிசி, கோதுமை போன்ற தானியங்களை இலவசமாக வழங்குவதற்காக மத்திய அரசு, இந்திய உணவுக் கழகம் வாயிலாக மாநில அரசுக்கு அனுப்பி வருகிறது. ஆண்டுக்கு 5.24 கோடி டன் அரிசியும், 1.90 கோடி டன் கோதுமையும் இவ்வாறு அனுப்பப்படுகின்றன. இவற்றில், 28 சதவீதம் அதாவது 2 கோடி டன், அதாவது 2,000 கோடி கிலோ அரிசி மற்றும் கோதுமை, பயனாளிகளை சென்றடைவதில்லை என்பது ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

உணவு கழகம்

சர்வதேச பொருளாதார விவகாரங்களுக்கான இந்திய ஆராய்ச்சி கவுன்சிலின் பேராசிரியர் அசோக் குலாட்டி தலைமையிலான குழு, ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. கடந்த 2022 ஆக., முதல் 2023 ஜூலை வரையிலான ஓராண்டில், அரசு அனுப்பிய பொருட்கள் மற்றும் பயனாளிகள் பெற்ற பொருட்களின் அளவை ஒப்பிட்டு, இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:ரேஷன் வினியோகத்துக்காக மாநில அரசுகளுக்கு, இந்திய உணவுக் கழகம் வாயிலாக அரிசி, கோதுமை உள்ளிட்டவற்றை மத்திய அரசு அனுப்புகிறது. இந்த ஆய்வு காலத்தில், 5.24 கோடி டன் அரிசி அனுப்பப்பட்டுள்ளது. அதில், 3.57 கோடி டன் மட்டுமே பயனாளிகளுக்கு சென்றுள்ளது. அதாவது, 32 சதவீத அரிசி பயனாளிகளுக்கு செல்லவில்லை.அதுபோல, 1.90 கோடி டன் கோதுமை அனுப்பப்பட்டதில், 1.6 கோடி டன் மட்டுமே பயனாளிகளுக்கு கிடைத்துள்ளது. இதில், 15 சதவீதம் மடைமாற்றப்பட்டுள்ளது.

மூன்று இடங்கள்

ஒட்டுமொத்தமாக இந்த இரண்டு தானியங்களில், 28 சதவீதம், அரசிடமிருந்து பயனாளிகளுக்கு செல்லும் வழியில் பலரால் அபகரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு மாயமாகும் பொருட்கள், வெளிச்சந்தைகளில் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.இந்த ஒரு ஆண்டில் மட்டும், இந்த வகையில் மத்திய அரசுக்கு 69,109 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது, அந்த ஆண்டில் அரிசி மற்றும் கோதுமையின் விலை அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது.கடந்த 2011 - 12ல், 46 சதவீதம் காணாமல் போன நிலையில், மத்திய அரசின் சில நடவடிக்கைகளால் அது குறைந்துள்ளது. அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து ஆகிய வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் குஜராத் ஆகியவையே, காணாமல் போகும் தானியங்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் உள்ளன. ரேஷன் முறை டிஜிட்டல் மயமாக்காதது இதற்கு காரணமாகும்.ரேஷன் நடைமுறைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டதால், ரேஷன் பொருட்கள் மோசடி வெகுவாக குறைந்துள்ளது.உதாரணத்துக்கு பீஹாரில், 2011 - 12ல் 68.7 சதவீதமாக இருந்த மோசடி, 2022 - 23ல் 19.2 சதவீதமாக குறைந்துள்ளது. மேற்கு வங்கத்தில், 69.4 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக குறைந்துள்ளது.உத்தர பிரதேசத்தில், 33 சதவீத பொருட்கள் மடைமாற்றப்பட்டுள்ளன. மாயமாகும் பொருட்களின் எண்ணிக்கையில் பார்த்தால், உத்தர பிரதேசமே முதலிடத்தில் உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தீர்வு என்ன?

ரேஷன் பயனாளிகள் விபரங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டதால், மோசடிகள் பெருமளவு குறைந்துள்ளன. இருப்பினும், ஒட்டுமொத்தமாக 28 சதவீதம் அளவுக்கு காணாமல் போவது கவலைக்குரிய ஒன்றே.இதற்கு மாற்று வழிகளை மத்திய அரசு ஆராய வேண்டும். பயனாளிகளின் உண்மையான எண்ணிக்கையை கண்டுபிடிப்பது முக்கியம். ரேஷன் முறைகளில் வெளிப்படை தன்மையை ஏற்படுத்த வேண்டும். உணவு தானியங்களை இலவசமாக வழங்குவதை விட, அதற்கு பதிலாக வங்கிக் கணக்கில் நேரடி பலன் மானியத்தை அளிப்பது போன்றவற்றை ஆலோசிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Barakat Ali
நவ 19, 2024 10:07

இந்த விசயத்துல கழகங்கள் கில்லாடிகள்.... கேரளாவுடன் ஒப்பந்தமே இருக்க வாய்ப்பு.... மைய பாஜக ரேஷனையே ஒழிச்சுடுங்க .........


R SRINIVASAN
நவ 19, 2024 09:34

ரேஷன் மோசடியை தவிர்க்க கீழ்கண்ட வழிகளை பின் பத்ரலாம் .1.மாதம் Rs.1௦,௦௦௦ அல்லது அதற்கு கீழே வருமானம் உள்ளவர்களுக்கே ரேஷன் என்பதை சட்டமாக்கலாம் .2.அந்தந்த பிராந்தியத்தில் ரேஷன் விநியோகத்தை தனிப்படை அமைத்து மாதந்தோறும் விநியோகத்தை சரி பார்க்கலாம்.


Yasararafath
நவ 19, 2024 09:28

இது எல்லாம் மத்திய அரசு திருட்டு.


Dharmavaan
நவ 19, 2024 08:55

இந்த திருட்டில் மந்திரி சம்பந்தப்பட்டிருந்தால் என்ன செய்வது


Dharmavaan
நவ 19, 2024 08:52

எப்படி காணாமல் போகிறது


VENKATASUBRAMANIAN
நவ 19, 2024 07:42

யோகி உடனே நடவடிக்கை எடுங்கள்


Kanns
நவ 19, 2024 07:28

Failures of All Blind-Supporting RulingParties by Supporting Idiotic ModiShahs Mental Aadhar SpyMasters Which Destroyed Indians Economy, Not Stopped All Pilferages- Freebies-Benefits All Foreign Infiltrators given Aadhar Denied to Native Citizens. SHAMELESS POWER-MISUSING DICTATORS


Dharmavaan
நவ 19, 2024 08:51

you are a traitor/anti national to be punished severely .


CHANDRASEKARAN C N
நவ 19, 2024 06:59

மானியத்தை நேரடியாக வங்கி கணக்கில் பயனாளரின் கணக்கில் செலுத்துவதுதான் இதற்கு தீர்வு.


Rajarajan
நவ 19, 2024 04:34

வாடிக்கையாளரின் வருமானத்தை பொறுத்து, ஒரு குறிப்பிட்ட தொகையை மாதா மாதம், அரசு அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தலாம். அவ்வப்போது, விலைவாசிக்கு ஏற்றார் போல, இந்த தொகையில் மாற்றம் செய்யலாம். அதைவிடுத்து, தரமற்ற பொருள்களை விநியோகிப்பதால் எந்த பலனும் இல்லை. குறிப்பாக மாதம் அதிக சம்பளம் பெரும் அரசு ஊழியருக்கு, ரேஷன் பொருள் மற்றும் மானியத்திலிருந்து முற்றிலும் நிறுத்தலாம்.


Raj
நவ 19, 2024 03:03

தனி படை அமைத்து கஸ்தூரியை பிடித்தது போல் குற்றவாளிகளை தேடிப்பிடிக்கவும். கைது செய்தவுடன் நீதிமன்றம் இது ஒரு குற்றம் இல்லை என்று விடுதலை செய்துவிடும்.


சமீபத்திய செய்தி