உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அந்தரங்க வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி பெண்ணை பலாத்காரம் செய்த அரசு அதிகாரி

அந்தரங்க வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி பெண்ணை பலாத்காரம் செய்த அரசு அதிகாரி

பல்லாரி : அந்தரங்க வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி, இளம்பெண்ணை பலாத்காரம் செய்த பல்லாரி மாவட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை கண்காணிப்பாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.சில மாதங்களாக பல்லாரி பி.ஐ.எம்.எஸ்., அரசு மருத்துவமனையில், பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்களில் சிலர் உயிரிழந்த சம்பவம், மாநில அளவில் சர்சையாக வெடித்தது. இந்த சர்ச்சை ஓய்வதற்குள், புதிய பிரச்னை, மருத்துவமனையில் எழுந்துள்ளது.பல்லாரி மாவட்ட பி.ஐ.எம்.எஸ்., அரசு மருத்துவமனையில், சைத்ரா, 25, என்ற பெண், கணினி ஆப்பரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் மீது பல்லாரி மாவட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை கண்காணிப்பாளர் வி.கே.வெங்கடேசன் ஆசைப்பட்டார்.கடந்த ஆண்டு நவ., 25ம் தேதி, சைத்ரா தனியாக இருந்தபோது, அவரை வெங்கடேசன் தாக்கி, தவறான முறையில் நடந்து கொண்டுள்ளார். இதை தன் மொபைல் போனில் வீடியோவாக எடுத்து வெங்கடேசன் வைத்திருந்தார்.நடந்ததை பற்றி வெளியே கூறினால், அந்தரங்க வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக கூறி சைத்ராவை அவர் மிரட்டினார்.பின் அவ்வப்போது, வீடியோவை வெளியிடுவதாக 'பிளாக் மெயில்' செய்து, அவரை பலாத்காரம் செய்தார்.விரக்தியின் உச்சத்திற்கு சென்ற சைத்ரா, வெங்கடேஷ் மீது நேற்று முன்தினம் பல்லாரி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.புகாரில் 'உன் கணவரின் நடத்தை சரியில்லை; அவரை ஏன் திருமணம் செய்தாய்? இச்சம்பவம் பற்றி வெளியில் கூறினால், உன் அந்தரங்க வீடியோவை வெளியிட்டு, குடும்ப மானத்தை வாங்குவேன். உன்னை நடுத்தெருவுக்கு கொண்டு வருவேன். 'விபசார வழக்கில் உன் சகோதரியையும், அம்மாவையும் சிறைக்கு அனுப்புவேன்' என, வெங்கடேசன் தன்னை மிரட்டியதாக சைத்ரா குறிப்பிட்டுள்ளார்.போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

என்றும் இந்தியன்
ஜன 05, 2025 16:45

இந்தியாவில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை கொடுக்க முஸ்லீம் நேரு இந்திய சட்டம் Constitution செய்தார். இப்போ ஸ்டாலின், ரெட்டி, கெஜ்ரிவால், பினராயி விஜயன், சித்தராமைய .......கெஜ்ரிவால் வரை முஸ்லிம்களுக்கு மிக அதிக முக்கியத்துவம் மற்றும்முன்னுரிமை கொடுப்பதால் அதே உஸ்லிம் வழியில் உடனே நமது இந்திய சட்டம் Constitution எல்லாம் குப்பையில் எரிந்து விட்டு ஷரியா சட்டம் உடனே அமல் படுத்தப்படவேண்டும். தவறு செய்தால் கையை வெட்டு கழுத்தை வெட்டு இந்த சட்டம் உடனே கொண்டு வந்தால் போதும் எல்லாம் சரியாகிவிடும். ந்த அந்தரங்க விடியோவிலிருந்து கற்பழிப்பு தீவிரவாதம் வரை உடனே அடங்கிவிடும்


gayathri
ஜன 06, 2025 12:33

இவர் முஸ்லிமா? இதில் எங்கு மதம் வந்தது


Neutrallite
ஜன 07, 2025 11:16

இந்த கருத்திற்கு பதில் அளித்தவர் இதனை முஸ்லீம் பற்றிய கருத்தாக எண்ணிக்கொண்டார் மேம்போக்காக பார்த்தால் அப்படி தான் தோன்றும். ஆனால், இவர் என்ன சொல்ல வருகிறார் என்றால், முஸ்லீம் நாடுகள் போல இங்கயும் கடுமையான தண்டனைகள் வந்தால் இதை போன்ற செயல்கள் குறையும் என்பது தான். மற்ற விஷயங்களில் முஸ்லீம்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் குறிப்பிட்ட அரசியல்வாதிகள், ஏன் முஸ்லிம் சட்டங்கள் இயற்றவில்லை என்று கேட்கிறார்.


Ramesh Sargam
ஜன 04, 2025 13:05

இதுபோன்ற காமகல்லுளி மகன்களை நடுரோட்டில் நிற்கவைத்து, பொதுமக்களைக்கொண்டு கல் வீசி தண்டிக்கவேண்டும். போலீஸ் விசாரணை, வழக்கு, நீதிமன்ற விசாரணை எல்லாம் வேஸ்ட்.


Oru Indiyan
ஜன 04, 2025 09:06

அரசியல்வாதிகள் சரியில்லை. அதிகாரிகள் சரியில்லை. நாடே சரியில்லை. உம்ம்


முக்கிய வீடியோ