உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா லோக்சபாவில் தாக்கல்: காரசார விவாதம்

வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா லோக்சபாவில் தாக்கல்: காரசார விவாதம்

வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா, லோக்சபாவில் இன்று (ஏப்.,2) மதியம், தாக்கல் செய்யப்பட்டது. ஆரம்பம் முதலே எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை ஏற்காததால், மசோதா தாக்கல் ஆனபோது அரசு தரப்பும், எதிர்க்கட்சி எம்பி.,க்களும் காரசாரமாக விவாதம் மேற்கொண்டனர்.சமூக நலத்திட்டங்களுக்காக முஸ்லிம்கள் எழுதி வைக்கும் சொத்துக்களை நிர்வகிக்க வக்ப் வாரியம் அமைக்கப்பட்டது; இவை, இதற்கென உருவாக்கப்பட்ட வக்ப் வாரிய சட்டப்படி நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. இந்த சட்டத்தில் சில திருத்தங்களை மத்திய அரசு செய்துள்ளது.

முக்கிய அம்சம்

அதில், வக்ப் வாரிய சொத்துக்களை நிர்வகிக்கும் கவுன்சிலில், பெண்கள் மற்றும் முஸ்லிம் அல்லாத பிற மதத்தவரையும் உறுப்பினராக்குவது, வக்ப் சொத்துக்களின் மீதான பிரச்னைகளில் மாவட்ட கலெக்டரே இறுதி முடிவு எடுப்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் வாயிலாக, வக்ப் வாரிய சொத்துக்களை அரசு அபகரிக்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.பார்லி., குளிர்கால கூட்டத்தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது, எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதைத் தொடர்ந்து கூட்டுக்குழு ஆய்வுக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டது.பா.ஜ., - எம்.பி., ஜெகதாம்பிகா பால் கூட்டுக்குழுவுக்கு தலைமை வகித்தார். முஸ்லிம்கள் தரப்பை மளமளவென அழைத்து ஆலோசனை நடத்தி விரைவாக பணிகளை முடித்தார். கூட்டுக்குழுவில் இடம் பெற்று இருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அளித்த பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டன. தே.ஜ., கூட்டணி எம்.பி.,க்களின் பரிந்துரைகள் மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.இதனால், கொதிப்படைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், தங்களின் பரிந்துரைகள் இறுதி அறிக்கையில் சேர்க்கப்படாததற்கு பார்லிமென்டில் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அவற்றை பரிசீலித்து இறுதி அறிக்கையில் சேர்க்க நடவடிக்கை எடுப்பதாக மத்திய அரசு உறுதி அளித்தது. இந்நிலையில், திட்டமிட்டபடி வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா லோக்சபாவில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. கேள்வி நேரம் முடிந்தவுடன் மதியம் 12:00 மணிக்கு, பார்லிமென்ட் விவகாரம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இந்த மசோதாவை தாக்கல் செய்தார்.மத்தியில் பா.ஜ., அரசுக்கு ஆதரவு அளித்து வரும், முக்கிய கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளமும், தெலுங்கு தேசமும் இந்த மசோதாவை ஆதரிப்பதாக ஏற்கனவே தெரிவித்து விட்டன. இதனால் மசோதா நிறைவேறுவதில் சிக்கல் இருக்காது. ஆனாலும், சிறுபான்மையினர் தொடர்பான விவகாரம் என்பதால், எதிர்க்கட்சிகள் சபையில் தங்கள் வாதத்தை முன்வைத்து, தங்கள் எதிர்ப்பை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்தனர். அதனால், அவ்வப்போது கூச்சலும், அமளியும் ஏற்பட்டன.

பாதுகாப்பு அதிகரிப்பு

பார்லிமென்ட் உள்ளேயும், வெளியேயும் ஏற்கனவே இருக்கும் பலத்த பாதுகாப்போடு, கூடுதல் கண்காணிப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பார்லிமென்டை நோக்கி வரும் சாலைகள், முக்கிய சந்திப்புகள் என டில்லியின் எல்லா முக்கிய இடங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எந்த ஒரு அசம்பாவிதமான சம்பவங்களும் ஏற்பட்டு விடாதபடி, நாடு முழுதும் கண்காணிப்புடன் இருக்கும்படி மத்திய உளவுத்துறையிலிருந்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

வக்ப் மசோதா நிறைவேற்றம் தொடர்பாக அலுவல் ஆய்வுக் குழு ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில், மணிப்பூரில் வன்முறை மற்றும் ஜனாதிபதி ஆட்சி, ஒரே எண் கொண்ட வாக்காளர் அடையாள அட்டை விவகாரம் உள்ளிட்டவை குறித்து லோக்சபாவில் விவாதம் நடத்த வேண்டும் என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.அரசு தரப்பு அதை ஏற்க மறுத்துவிட்டதாக தெரிகிறது. மேலும், 'வக்ப் மசோதாவை நிறைவேற்றக் கூடாது. அதை கையில் எடுக்கக் கூடாது' என, எதிர்க்கட்சிகள் தரப்பில் வாதிடப்பட்டது.அதையும், மத்திய அரசு ஏற்கவில்லை. இதனால், கோபமடைந்த எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அனைவருமே அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். எத்தகைய தடைகள் வந்தாலும் அனைத்தையும் தகர்த்தெறிந்து விட்டு, வக்ப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றியே தீருவது என்ற முடிவில் மத்திய அரசு திடமாக உள்ளது. இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட பின், அதன் மீதான விரிவான விவாதம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எட்டு மணி நேரத்திற்கு விவாதம் நடத்த நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் திட்டமிட்ட காலக்கெடுவையும் தாண்டி நள்ளிரவு வரை கூட விவாதம் நீட்டிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

சகுரா
ஏப் 03, 2025 06:07

எதிர் கட்சிகள் சிறுபாண்மையினருக்கு நல்லது செய்கிறோம் என்ற பெயரில் கெடுதல்தான் செய்கிறார்கள். இதை எப்போது கட்சிகளுக்கு அப்பார்ப்பட்டு திறந்த மனதுடன் சிந்தித்துப் பார்த்து புரிந்து கொள்வார்கள் என்று தெரியவில்லை


venugopal s
ஏப் 02, 2025 21:29

இந்த சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டதால் மத்திய பாஜக அரசு இதை மாற்றியதை ஆதரிக்கிறேன். அளவுக்கு அதிகமான அதிகாரம் தவறாகப் பயன் படுத்தப்படும் என்பதற்கு இது சரியான உதாரணம். அது போலவே மத்திய பாஜக அரசும் அளவுக்கு அதிகமான அதிகாரம் இருப்பதால் தவறாகப் பயன்படுத்துகிறது. மாநில அரசுகளுக்கு அதிக அதிகாரம் அளிக்க வேண்டும்.


Bahurudeen Ali Ahamed
ஏப் 02, 2025 16:40

"சமூக நலத்திட்டங்களுக்காக முஸ்லிம்கள் எழுதி வைக்கும் சொத்துக்களை நிர்வகிக்க வக்ப் வாரியம் அமைக்கப்பட்டது" என்றே தெளிவாக இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது ஆனாலும் சிலர் இங்கு வந்து வன்மத்தை கக்குகின்றனர்


Gopal
ஏப் 02, 2025 16:15

காங்கிரஸ் இந்தியாவின் சாபம்.


SP
ஏப் 02, 2025 15:31

பாராளுமன்றத்தில் தொடர்ந்து அவையே நடத்த முடியாமல் தடுத்துக் கொண்டே இருந்தால் மூன்று தொடருக்கு மேல் இதை நீடித்தால் சம்பந்தப்பட்ட உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யும் வகையில் சட்ட திருத்தம் செய்ய வேண்டும்.


M Ramachandran
ஏப் 02, 2025 10:14

முஸ்லிம்கள் வரவேற்காற்றாலும்...


Dharmavaan
ஏப் 02, 2025 09:30

வக்ப் நினைத்தபடி சொத்துக்களை ஆக்கிரமிப்பதை ஏன் தடை செய்யவில்லை. சட்டப்படி மற்ற சொத்து பரிமாற்றம் நடைமுறை ஏன் இதற்கு இல்லை


vbs manian
ஏப் 02, 2025 09:23

மைனாரிட்டி என்ற போர்வையை போற்றி கொண்டு நடக்கும் தவறுகள் எவ்வளவு நாட்கள் தொடரும். நாட்டின் வளங்களில் மைனாரிட்டிக்குதான் முதல் உரிமை என்று ஒரு பிரதமர் பேசினார். மற்றவர்கள் வேடிக்கை பார்க்க வேண்டுமா. இந்த மினாரிட்டி என்ன செய்தாலும் கேட்கக்கூடாது. கோர்ட் தலையிடமுடியாது. இவர்கள் வானத்திலிருந்து வந்தார்களா. காங்கிரஸ் விதைத்த மினாரிட்டி விதை இப்போது ஆல விருட்சமாக வளர்ந்து மிரட்டுகிறது. நாட்டின் ஒற்றுமை கருதி இந்த வக்ப் மசோதா நிறைவேற்றப்பட வேண்டும்.


vijai hindu
ஏப் 02, 2025 08:24

நாசமா போன காங்கிரஸ்ஸ நாட்டை விட்டு விரட்ட வேண்டும்


N.Purushothaman
ஏப் 02, 2025 08:02

வக்பு வாரியத்திற்கு எதிராக இஸ்லாமியர்களே கொந்தளிப்பில் தான் உள்ளனர் ....அந்த அளவிற்கு சகட்டு மேனிக்கு பலரின் சொத்துக்களை வக்பு வாரியம் உரிமை கொண்டாடுகிறது


முக்கிய வீடியோ