தயார் நிலையில் அரசு
தயார் நிலையில் அரசு
பண்டிகை காலத்தில் பசுமைப் பட்டாசு வெடிக்க அனுமதிக்கக் கோரி டில்லி அரசு தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. நீதிமன்றம் அனுமதி அளிக்கும் என எதிர்பாக்கப்படும் நிலையில், அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் சுற்றுச்சூழல் அமைச்சர் மஞ்ஜிந்தர் சிங் சிர்சா நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, நிருபர்களிடம் சிர்சா கூறியதாவது: பட்டாசு வெடிப்பதற்கான தடை நீக்கப்பட்டால், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த அரசு தயாராக உள்ளது. தீபாவளி மற்றும் குருபுரப் பண்டிகை நாட்களில் காலை மற்றும் மாலை நேரத்தில் குறைந்தது ஒரு மணி நேரம் தடை நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தடை நீக்கப்பட்டால் எடுக்க வேண்டிய காற்று மாசு கட்டுபாட்டு நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில், ரசாயண பட்டாசுகளைக் கண்காணித்து பறிமுதல் செய்யவும் அரசு தயாராக உள்ளது. பசுமைப் பட்டாசுகள் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் துவக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.