உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புதிய வருமான வரி மசோதா வாபஸ்; திருத்தங்களுடன் தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதிய வருமான வரி மசோதா வாபஸ்; திருத்தங்களுடன் தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பிப்.2025ல் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி மசோதாவை திரும்ப பெற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. திருத்தங்களுடன் மீண்டும் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த பழமையான வருமான வரிச்சட்டம், 1961ஐ மாற்றும் அம்சமாக, இந்தாண்டு தொடக்கத்தில் லோக் சபாவில் வருமான வரி மசோதா 2025 அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இந்த மசோதா மீது பல்வேறு கருத்து வேறுபாடுகள் எழுந்தன. இது பற்றி டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டத்தில் இன்று (ஆக.8) விவாதிக்கப்பட்டது. இதில் பிப். மாதம் தாக்கல் செய்யப்பட்ட வருமானவரி மசோதா, 2025ஐ திரும்ப பெற ஒப்புதல் அளிக்கப்பட்டது.பாஜ எம்.பி., பைஜய்ந்த் பாண்டா தலைமையிலான 31 பேர் கொண்ட தேர்வுக்குழு, சட்டத்தில் சில மாற்றங்களை பரிந்துரைத்துள்ளது. அவற்றை உள்ளடக்கிய புதிய வருமான வரி சட்ட மசோதா ஆக.11ம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

தாமரை மலர்கிறது
ஆக 08, 2025 20:24

உலகிலேயே கம்மியான வருமான வரியுள்ள ஒரே நாடு இந்தியா தான். வருமான வரியை முற்றிலும் நீக்கிவிட்டு, அதற்கு பதில் ஜிஎஸ்டியை தென் மாநிலங்களில் நாற்பது சதவீதமாக உயர்த்துவது நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும். மேலும் சீரான வளர்ச்சிக்கு, வடமாநிலங்களில் ஜிஎஸ்டியை இருபது சதவீதமாக குறைக்க வேண்டும். பொருளாதாரத்திற்காக தொழிலாளர்கள் புலம்பெயர்வது இயற்கைக்கு எதிரானது. வடமாநில தொழிலாளிகள் தமிழகத்திற்கு வராமல் தடுக்க, திருப்பூர் தொழிற்சாலைகளை பீகார், உபிக்கு மாற்றுவது நல்லது. எந்த தமிழரும் திருப்பூரில் வேலை செய்வதில்லை. வடஇந்திய தொழிலாளிகள் தான் வேலை செய்கிறார்கள். அவர்கள் ஏன் திருப்பூரில் செய்ய வேண்டும்?


KRISHNAN R
ஆக 09, 2025 12:01

ஏ ன்...... குறைவான சம்பளம்... லேபர் exploitation


சமீபத்திய செய்தி