உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும்: பிரதமர் மோடி உறுதி

அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும்: பிரதமர் மோடி உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள் வரும் காலங்களில் இன்னும் அதிக வீரியத்துடன் தொடரும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.இது குறித்து சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 11 ஆண்டுகால தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில், மத்திய அரசு திட்டங்களின் பலன்கள் எவ்வித பாகுபாடும் அல்லாமல் அனைவரையும் சென்று அடைந்துள்ளது. மக்களின் வாழ்க்கையை எளிமையாக மேம்படுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது. அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள் வரும் காலங்களில் இன்னும் அதிக வீரியத்துடன் தொடரும். கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு வரிச் சலுகை நிஜமானது. ரூ.12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி இல்லை. நடுத்தர வர்க்கக் குடும்பங்கள் இப்போது தாங்கள் சம்பாதிப்பதில், அதிக பணத்தை சேமித்து கொள்கின்றனர். ஜிஎஸ்டி வரி சீர்திருத்தங்கள் வணிகம் செய்வதை எளிதாக்குகின்றன. அதிக அளவில் தீபாவளி விற்பனை நடந்துள்ளன. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுளளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Narayanan Muthu
டிச 26, 2025 18:09

அதாவது மக்களுக்கு துயரங்கள் தொடரும் என்பதுதான் இதன் அர்த்தம்


guna
டிச 26, 2025 20:00

நாராயண.. நீயே ஒரு அரைவேக்காடு...


அப்பாவி
டிச 26, 2025 15:25

உருவல் ரெட்டிப்பாகும்.


Gokul Krishnan
டிச 26, 2025 14:10

பன்னிரண்டு வருடங்கள் ஆகி விட்டது உங்கள் சீர்திருத்தம் எல்லாம் சாதாரண மக்களை கசக்கி பிழிவது தான் . நீரவ் மோடி லலித் மோடி விஜய் மல்லையா மெகுல் சொக்சி இவர்களை எல்லாம் ஒன்றும் செய்ய முடிவது இல்லை 2ஜி மேல் முறையிட்டு மனு வலுவாக இல்லை 2013 இல் அமெரிக்கா டாலருக்கு எதிராக நீங்கள் பேசிய பேச்சு இப்போது ஞாபகம் உள்ளதா


vivek
டிச 26, 2025 20:01

கோகுல. எவளோ முக்கி முக்கி கருத்து போட்டாலும் மக்கள் தெளிவா இருக்காங்க....


Sundar R
டிச 26, 2025 13:50

நம் பாரதத்தில் மிகவும் அவசியமான, உடனடியாக செயல்படுத்த வேண்டிய தேர்தல் சீர்திருத்தங்கள்: முக்கியமாக ஐயா மோடிஜி அவர்கள் தேர்தல் சீர்திருத்தத்தைக் கொண்டு வர வேண்டும். தேர்தலில் யோக்கியர்கள் தான் போட்டியிட வேண்டும். கருணாநிதி குடும்பத்தினரைப் போல வாரிசுகள், குடும்பத்தினர், உறவினர்கள், பினாமிகள் ஆகியோர் தேர்தலில் போட்டியிட முடியாதவாறு தடை செய்ய வேண்டும். தேசவிரோத, பிரிவினைவாத, சமூகவிரோத, அன்னிய மாநிலத்தோர் ஆகியோர் தேர்தலில் போட்டியிட முடியாதவாறு நிரந்தரமாக தடைசெய்ய வேண்டும். அரசியல்வாதிகள் மீது லஞ்சம், ஊழல், கிரிமினல் குற்றவாளிகள் ஆகியவை நிரூபிக்கப்பட்டால், அவர்கள் நிரந்தரமாக தேர்தலில் போட்டியிட முடியாதவாறு தடை விதிக்க வேண்டும்.


elango
டிச 26, 2025 12:11

கச்சா ஆயில் 60 டாலர் பெட்ரோல் ரூ 102 ஆ


vivek
டிச 26, 2025 12:52

காங்கிரஸ் வாங்குன ஆயில் கடன் யார் அடைப்பார்


V Venkatachalam, Chennai-87
டிச 26, 2025 14:26

இருக்கட்டுமே.


முக்கிய வீடியோ