உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமெரிக்கா 50% வரி விதிப்பு; பருத்தி இறக்குமதிக்கு டிச.,31 வரை வரி விலக்கு அளித்தது மத்திய அரசு

அமெரிக்கா 50% வரி விதிப்பு; பருத்தி இறக்குமதிக்கு டிச.,31 வரை வரி விலக்கு அளித்தது மத்திய அரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால், பாதிப்பை எதிர்கொள்ளும் ஜவுளி ஏற்றுமதியாளர்களை ஆதரிப்பதற்காக, பருத்தி இறக்குமதிக்கு டிசம்பர் 31 வரை வரி விலக்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது.அமெரிக்கா இந்தியா பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 50 சதவீதமாக உயர்த்தி உள்ளது. அமெரிக்காவின் வரி விதிப்பால் ஜவுளி துறை கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. இந்த சூழலில் ஜவுளி ஏற்றுமதியாளர்களை ஆதரிப்பதற்காக, மேலும் மூன்று மாதங்களுக்கு பருத்தி இறக்குமதிக்கு வரி விலக்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது.இது தொடர்பாக, மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பருத்தி இறக்குமதிக்கு டிசம்பர் 31 வரை வரி விலக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஏற்றுமதியாளர்களை ஆதரிப்பதற்காக இறக்குமதி வரி விலக்கை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இந்த நடவடிக்கை நூல், துணி, ஆடைகள் மற்றும் அலங்காரப் பொருட்கள் உள்ளிட்ட ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு பலனை அளிக்கும். உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோருக்கு மிகவும் தேவையான நிவாரணத்தை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.இந்த வரி விலக்கு உள்நாட்டு சந்தையில் பருத்தி கிடைப்பதை அதிகரிக்கும். பருத்தி விலையை உறுதிப்படுத்தும். இதன் மூலம் ஜவுளிப் பொருட்கள் மீதான பணவீக்க அழுத்தத்தைக் குறைக்கும்.இது உற்பத்திச் செலவுகளைக் குறைப்பதன் மூலமும், ஜவுளித் துறையில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உதவியாக இருக்கும். இந்திய ஜவுளிப் பொருட்களின் ஏற்றுமதி போட்டித்தன்மையை ஆதரிக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

ManiMurugan Murugan
ஆக 29, 2025 00:23

ManiMurugan Murugan நம் நாட்டில் உள்ள சீன கொரிய ஆடைகளை விற்பனை செய்யும் நிறுவனங்களில் பேச்சுவார்த்தை நடத்தி 50-50 என்ற நிலையை அடைய வேண்டும்


ManiMurugan Murugan
ஆக 29, 2025 00:21

ManiMurugan Murugan பருத்தி உற்பத்தி மற்றும் பாலொயெஸ்டர் பருத்தி உற்பத்தியை நம் நாட்டில் ஏற்படுத்த வேண்டும்


ManiMurugan Murugan
ஆக 28, 2025 23:52

பருத்தி இறக்குமதி வரியை குறைப்பது என்பது தேவையில்லை என்பதே எனது கருத்து அமெரிக்காவில் பருத்தி விளைச்சல் கிடையாது அங்கிருந்து வருவது பாரிஸ்டர் பஞ்சு அதை இறக்குமதி செய்து செய்து அவர்களுக்கே ஏற்றுமதி இதில் வரி குறைப்பு என்பது யாருக்கு லாபம் நமது செய்த உடைகள் வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி என்றால் லாபம் அதை மத்திய பசு செய்து உள்ளதாக கூறியுள்ளனர் நம் பாரத த்தில் பருத்தி உற்பத்தியை அதிகரிக்கவும் வெ க் வான் மெத்தை தலையணைகளை தவிர்க்கலாம் இல்லை நம் நாட்டில் பருத்தி கலந்த பாலியெஸ்டர் பஞ்சு தயாரிக்கலாம் மொத்தமாக அமெரிக்காவை விரட்டலாம் நம் விவசாயிகள் நெ சபா ஒர் கள் முயற்சிக்க வேண்டும்


sasikumaren
ஆக 28, 2025 21:01

இது மிகப்பெரிய முட்டாள்தனம் அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிக்க மறுக்க பட்டால் மீண்டும் அமெரிக்க வரி விதிப்பு முறையில் எகிறி நிற்க்கும் இங்குள்ள பருத்தி வியாபாரத்தில் இந்தியா விவசாயிகள் கொடி கட்டி நிற்கும் போது நமக்கெதற்கு அமெரிக்கா பருத்தி தேவை இருக்கிறது நமது உயர் தர பருத்தி மற்றும் விவசாய விளை பொருட்கள் மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது பிறகு எதற்கு அமெரிக்காவின் ஏற்றுமதி பொருட்களின் தேவை வேலை என்ன


Thangavel
ஆக 28, 2025 15:02

அமெரிக்கா பொருட்கள் மற்றும் கேளிக்கை நிறுவகளுக்கு Facebook twitter, instagram ,திரைப்படம் 500% வரி விதிக்கலாம்


Nathan
ஆக 28, 2025 13:55

மத்திய அரசு கொடுக்கும் வரிச் சலுகையை ஏற்றுமதியாளர்கள் அமெரிக்காவுக்கு சாதகமாக பயன் படுத்தாமல் விலையை குறைத்து ஏழை நாடுகளுக்கு தங்களது உற்பத்தியை ஏற்றுமதி செய்ய வேண்டும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தது போல் அது அமையும். ஏழைகள் குறைந்த விலையில் பொருட்களை பெறுவர். அமெரிக்கா விற்பனை பொருள் பற்றாக்குறையால் கூடுதல் விலைக்கு வாங்கி பயன்படுத்தட்டும்


அப்பாவி
ஆக 28, 2025 11:26

கணிசமான பருத்தி அமெரிக்காவிலிருந்து வருமே..


சாமானியன்
ஆக 28, 2025 11:15

Some what mid course correction for the present tax war. Hope situation may ease. Nearly dozen other countries will buy our thirupur products


சமீபத்திய செய்தி