உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒடிஷா அரசு அலுவலகங்கள் காலையில் மட்டுமே இயங்கும்

ஒடிஷா அரசு அலுவலகங்கள் காலையில் மட்டுமே இயங்கும்

சம்பல்பூர் : ஒடிஷாவின் சம்பல்பூர் மாவட்டத்தில் கடும் வெயில் அடிப்பதால், அரசு அலுவலகங்களின் வேலை நேரத்தை மாற்றி கலெக்டர் அதிரடி உத்தரவிட்டுள்ளார். ஒடிஷாவில் முதல்வர் மோகன் சரண் மஜி தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள சம்பல்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் கொளுத்துகிறது. இங்கு கடந்த 6ல் அதிகபட்சமாக 40.6 டிகிரி செல்ஷியசும், மறுநாள் 40 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து இந்த மாவட்டத்தில் அரசு அலுவலகங்களின் பணி நேரத்தை மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து கலெக்டர் வெளியிட்ட உத்தரவு:

அரசு அலுவலகங்கள் தற்போது காலை 10:00 முதல் மாலை 5:00 வரை இயங்கி வருகின்றன. கடந்த சில நாட்களாக சல்பல்பூர் மாவட்டத்தில் கடும் வெயில் கொளுத்துகிறது. இதையடுத்து, இனி மாநில அரசு அலுவலகங்கள், வருவாய்த்துறை அலுவலகங்கள் மற்றும் மாஜிஸ்திரேட் கோர்ட்டுகள் உள்ளிட்டவை காலை 7:00 முதல் பிற்பகல் 1:00 மணி வரை உணவு இடைவேளையின்றி இயங்கும். நேற்று முதல் அமலுக்கு வந்துள்ள இந்த உத்தரவு வரும் ஜூன் 15 வரை அமலில் இருக்கும். எனவே, அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இந்த நேரத்தில் பணிக்கு வரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Thetamilan
ஏப் 11, 2025 11:24

பாஜ அரசின் சாபக்கேடு


Columbus
ஏப் 11, 2025 08:51

Even Jaipur courts work from morning 0800 am in summer.


R S Devarajan
ஏப் 11, 2025 06:27

துபாய் அமீரகத்தில் இது போல் தான் அரசு அனுமதி கோடை காலத்தில் மட்டும்


Keshavan.J
ஏப் 11, 2025 09:36

கடுமையான வெயில் மாதத்தில் கட்டட பணியாளர்கள். மற்றும் சாலை பணியாளர்களுக்கு மதியம் 12 முதல் மணிவரை விடுப்பு. இப்போதெல்லாம் வெட்ட வெளியில் பணி செய்வோருக்கு தெர்மல் ஜாக்கெட் தருகிறார்கள். இது உடலை குளுமையை வைக்கும். டெலிவரி பாய்ஸ் எல்லோரும் இதை ஜாக்கெட்டை உபயோகிறார்கள்


சமீபத்திய செய்தி