உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஐ.எம்.எப்., செயல் இயக்குநர் சுப்ரமணியம் நீக்கம்; 6 மாதத்திற்கு முன் பொறுப்பிலிருந்து விடுவிப்பு

ஐ.எம்.எப்., செயல் இயக்குநர் சுப்ரமணியம் நீக்கம்; 6 மாதத்திற்கு முன் பொறுப்பிலிருந்து விடுவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஐ.எம்.எப்., செயல் இயக்குனர் பொறுப்பில் இருந்து கே.வி.சுப்ரமணியம் நீக்கம் செய்யப்பட்டார். 6 மாதத்திற்கு முன்பே பொறுப்பிலிருந்து விடுவிக்கப் பட்டார்.சர்வதேச நாணய நிதியத்தின் செயல் இயக்குநராக, இந்தியா சார்பில் கே.வி.சுப்ரமணியம் பொறுப்பு வகித்து வந்தார். இவர், 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் பொறுப்பேற்றார். பதவிக் காலம் முடிய 6 மாதம் உள்ள நிலையில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பில், “சர்வதேச நாணய நிதியத்தில் (இந்தியா) செயல் இயக்குநர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியனை உடனடியாக விடுவிக்க அமைச்சரவை நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது. அரசாங்கத்தால் அவரது பதவிக்காலம் குறைக்கப்பட்டதற்கான எந்த காரணமும் தெரிவிக்கப்படவில்லை.இவர் சமீபத்தில், ஐ.எம்.எப்., வெளியிடும் உலகப் பொருளாதாரம் தொடர்பான புள்ளி விவரங்கள் குறித்து கேள்விகளை எழுப்பியிருந்தார். அதுமட்டுமின்றி, அவர் எழுதிய புத்தகத்துக்காக மேற்கொள்ளப்பட்ட விளம்பர செயல்பாடுகளும் சர்ச்சையை ஏற்படுத்தின. இந்த நிலையில் தான் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்தியா சார்பில் புதிய செயல் இயக்குனர் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளார்.பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள பாகிஸ்தான், ஐ.எம்.எப்., நிதி உதவியுடன் காலத்தை ஓட்டி வருகிறது. அந்த நாட்டுக்கான அடுத்த கட்ட நிதியுதவி தொடர்பான செயல்பாடுகள் நடந்து வரும் நிலையில் இந்த நிகழ்வு நடந்துள்ளது.யார் இந்த சுப்ரமணியம்? * கே.வி. சுப்பிரமணியம் என்றும் அழைக்கப்படும் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியம், மத்திய அரசின் 17வது தலைமை பொருளாதார ஆலோசகர் ஆவார். மேலும் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட இளையவரும் ஆவார்.* 2018 முதல் 2022 வரை நாட்டின் இளைய தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த சுப்பிரமணியம், நவம்பர் மாதம் 2022ல் ஐ.எம்.எப்., நிர்வாக இயக்குநராக சேர்ந்தார். * இவர் ஐஐடி கரக்பூரில் மின் பொறியியல் பயின்றார், பின்னர் ஐ.ஐ.எம்., கோல்கட்டாவில் எம்.பி.ஏ., பட்டம் பெற்றார். செபி மற்றும் ரிசர்வ் வங்கியில் பல்வேறு நிபுணர் குழுக்களில் பணி செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Ganesun Iyer
மே 04, 2025 16:43

கிராஸ் கிரிப்டோங்க, இங்க கோல்டு, ரத்தினம்ன்னு பேர் வெச்சிகிட்டு மத்தவங்க வகுப்பை அடை மொழி படுத்துதுங்க...


Samayan Venkatasamy
மே 04, 2025 12:20

இட் மே பே பே டு பாலிடிக்ஸ் தி ஹிஜிஹெர் சுதாரிட்டி ஒன்லி கம் டு க்நொவ் ஆல்சோ ஹி ஐஸ் தமிழ்நாடு ஆத்மி ஹை .


RAMAKRISHNAN NATESAN
மே 04, 2025 13:48

நீங்க கருத்து எழுதியது எந்த மொழியில் ?


திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானஸ்கந்தன்
மே 04, 2025 14:46

மே பி தி ஒன்லி ரீஸன் பார் ஹிஸ் டிஸ்மிஸல் தட் ஹி இஸ் எ மதராஸி?


India our pride
மே 04, 2025 11:18

பாக்கிஸ்தான் IMF இடம் இருந்து 1.5 பில்லியன் டாலர் கடன் வாங்க முயற்சி செய்கிறது. இது அவர்கள் இந்தியாவுடன் போரை தொடங்க உதவி செய்யும். இதை தடுக்க சுப்பிரமணியம் சரியான முயற்சி எடுக்கவில்லை என்பது அரசின் நிலைப்பாடு. அதனால் ஒரு சரியான நபரை அரசு நியமிக்கும்.


James Mani
மே 04, 2025 13:58

Not useful For country


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 04, 2025 11:04

இந்த நூலிப்பன் ஐ எம் எஃப் மூர்க்கத்துக்கு நிதியுதவி அளித்ததைத் தடுக்கலை என்பதுதான் காரணமா ??


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை