உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜி.பி.எஸ்., விபரீதம்: ஆற்றில் விழுந்து மூவர் பலி

ஜி.பி.எஸ்., விபரீதம்: ஆற்றில் விழுந்து மூவர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பரேலி,: உத்தர பிரதேச மாநிலம், தாடாகஞ்ச் அருகே ஜி.பி.எஸ்., எனப்படும் டிஜிட்டல் வழிகாட்டும் வரைபடத்தை பயன்படுத்தி காரில் பயணித்த மூவர், உடைந்த பாலத்தில் இருந்து காருடன் ஆற்றுக்குள் விழுந்து உயிரிழந்தனர். உத்தர பிரதேசத்தின் பரேலி பகுதியைச் சேர்ந்த மூவர், படவுன் மாவட்டம் தாடாகஞ்ச் பகுதிக்கு நேற்று காலை காரில் புறப்பட்டனர். வழி தெரியாது என்பதால் ஜி.பி.எஸ்., வரைபடத்தின் துணையுடன் பயணித்து உள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xo94rfk3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இவர்களது கார், நேற்று காலை 10:00 மணி அளவில் கரன்பூர் பகுதியில் உள்ள ராம்கங்கா ஆற்று பாலத்தில் சென்றது. அந்த பாலம் சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதியாக உடைந்திருந்தது. இது ஜி.பி.எஸ்.,சில் காட்டாததால், அந்த பாலத்தின் மீது வேகமாக சென்றனர். உடைந்த பாலத்தின் முடிவில் தடுப்புகள் ஏதும் இல்லாததால்,50 அடி உயரத்தில் இருந்து ராம்கங்கா ஆற்றுக்குள், கார் பாய்ந்தது. ஆற்றில் தண்ணீர் செல்லாததால் கீழே விழுந்ததில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. அதில் பயணித்த மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் இந்த சம்பவத்திற்கு பின், போலீசார் பாலத்தை மூடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

SIVA ANANDHAN
நவ 26, 2024 09:01

Chennai மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் redhills அருகே இதுபோன்று நடந்தது. அனால் உயிர் சேதம் இல்லை


Haja Kuthubdeen
நவ 25, 2024 10:18

பலுதடைந்த பாலத்தில் போக்குவரத்திற்கு எப்படி அனுமதி....தடுப்பு கூடவா அமைக்க முடியவில்லை....இது நிர்வாக தவறு.


வைகுண்டேஸ்வரன்
நவ 25, 2024 09:32

உ பி முதல்வரையும் எதுவும் சொல்ல முடியாது. திராவிட என்ஜினீயர், விடியல் போலீஸ் னு ஏதாச்சும் எழுதிப் போடுங்க.


sankaranarayanan
நவ 25, 2024 09:08

ஏன் கட்டுகிண்ற பாலத்தில் ஆரம்பத்திலேயே தடுப்பு வைக்கமாட்டார்களா? அந்த சாலையிலிருந்து அந்த பாலம் ஆரம்பத்தில் குறுக்கே தடை வைக்கமாட்டார்களா என்னடா இது?


கிஜன்
நவ 25, 2024 09:05

திஸ் ஹேபண்ட் இன் ...உ.பி .... அண்டர்லைன் தி வேர்ட் .... உ.பி ....


SUBBU,MADURAI
நவ 25, 2024 09:29

பாஜக ஆளும் இந்த உ.பி உப்பட எந்த மாநிலத்தில் இப்படி நடந்திருந்தாலும் தவறு தவறுதான்.


ديفيد رافائيل
நவ 25, 2024 08:29

1 உடைந்த பாலத்தில் எச்சரிக்கை தடுப்புச்சுவர் அமைக்காமல் நெடுஞ்சாலைத்துறை தவறு செய்தது. 2 கூகுள் மேப்ஸைப் பார்த்து வண்டி ஓட்டுபவர்களைப் போலத்தான், சாலையைப் பார்த்து அல்ல.


ديفيد رافائيل
நவ 25, 2024 08:27

1 உடைந்த பாலத்தில் எச்சரிக்கை தடுப்புச் சுவர் அமைக்காமல் நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் தவறு செய்துள்ளது. 2 கூகுள் மேப்பைப் பார்த்து கார் ஓட்டுவது, சாலையைப் பார்த்து ஓட்டாமல் இருப்பது போன்றது


D.Ambujavalli
நவ 25, 2024 08:02

பாலம் உ டைந்ததுமே எச்சரிக்கை பலகை போடத்தவறிய நெடுஞ்சாலைத்துறைக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு என்ன நிவாரணம் கிடைக்கும்?


அப்பாவி
நவ 25, 2024 07:51

உ.பி ல யாரோட பொற்கால ஆட்சி நடக்குது?


M Ramachandran
நவ 25, 2024 09:27

GPS வரையப்படும் நமூருக்கு ஒத்துவராது சமீப காலத்தில் கேராவில் ஒரு காரில் சென்றவர்கள் நீர்நிலையில் விழுந்து விட்டனர். ரோப்காட்டில் ஸயின் போர்டு நெடுஞ்சாலையில் யிருப்பதை பார்த்து தெரிந்து கொள்ளவேண்டியது நம் கடமை. அயல் நாட்டில் கூட சில சமயம் GPS கருவியால் சில அசாதாரண நிகழ்வுகள் நிகழ்கின்றன. இதற்கு அரசியல்சாயம் பூசுவார்கள் கட்சி போதையில் பிதற்றுவார்கள்.


ஆராவமுதன்,சின்னசேலம்
நவ 25, 2024 09:32

நீ உடனே உபிக்கு போய்


VENKATASUBRAMANIAN
நவ 25, 2024 07:50

காவல்துறையின் கவனக்குறைவு. ஒரு தடுப்பு போட்டிருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது. சம்பந்தப்பட்ட காவலர்கள் டிஸ்மிஸ் செய்ய படவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை