மேலும் செய்திகள்
அரசு மருத்துவமனையில் புற்றுநோய் விழிப்புணர்வு
25-Oct-2024
அயோத்தி: உ.பி.,யில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு, இந்த ஆண்டு தங்களது 8 வது தீபத்திருவிழாவை அயோத்தியில் நடத்துகிறது. ராமர் கோவிலில் இதற்காக சுற்றுச்சூழல் பாதுகாப்பு உணர்வோடு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.25 முதல் 28 லட்சம் விளக்குகளை சரயு நதிக்கரையில் ஏற்றி புதிய உலக சாதனை படைக்க, இலக்கு நிர்ணயித்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. உ.பி., அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:இந்த தீபத்திருவிழாவில், சுற்றுச்சூழல் பாதுகாப்பும் முக்கிய கவனம் செலுத்தப்படும்.இங்கு ஏற்றப்படும் விளக்குகள்,நீண்ட காலத்திற்கு எரியும்.சிறப்பு மெழுகு விளக்குகள் கார்பன் உமிழ்வைக் குறைக்கவும், கோயிலை பாதுகாக்கவும் பயன்படுத்தப்படும்.சிறப்பு மலர் அலங்காரத்தால் அலங்கரிக்கப்படும். ராமர் கோவில் வளாகம், அலங்காரத்திற்காக பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவினருக்கும் குறிப்பிட்ட பொறுப்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது.இந்த தீபாவளிக்கு அயோத்தியை மதம் மற்றும் நம்பிக்கையின் மையமாக மட்டுமல்லாமல், தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் உணர்வின் அடையாளமாகவும் மாற்றுவதை கோயில் அறக்கட்டளை நோக்கமாகக் கொண்டுள்ளது.தீபத்திருவிழா பிரமாண்டம் நீடித்த உணர்வை ஏற்படுத்துவதை உறுதி செய்வதற்காக, கோவிலின் பவன் தரிசனத்திற்காக அக்டோபர் 29 முதல் நவம்பர் 1 வரை நள்ளிரவு வரை திறந்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்
25-Oct-2024