உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமிர்தசரஸ் கோவிலில் கையெறி குண்டு வீச்சு: பாக்.,கிற்கு தொடர்பு என போலீசார் சந்தேகம்

அமிர்தசரஸ் கோவிலில் கையெறி குண்டு வீச்சு: பாக்.,கிற்கு தொடர்பு என போலீசார் சந்தேகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அமிர்தசரஸ்: பஞ்சாபின் அமிர்தசரஸின் கந்த்வாலா பகுதியில் உள்ள கோவிலில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர், கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.தாகுர்த்வாரா கோவிலில் நள்ளிரவு 12:35 மணிக்கு நடந்த இச்சம்பவத்தின் சிசிடிவி கேமரா பதிவுகள் வெளியாகி உள்ளன. அதில், மோட்டார் சைக்கிளில் கொடியுடன் வந்த இருவர் கோவிலை நோட்டமிட்டனர். பிறகு, பொருள் ஒன்றை உள்ளே வீசி விட்டு தப்பிச் சென்றனர். சிறிது நேரத்தில் கோவிலில் குண்டு வெடித்த காட்சிகள் பதிவாகி இருந்தது.அப்போது, கோவிலுக்குள் இருந்த அர்ச்சகர் காயமின்றி உயிர் தப்பினார். வேறு யாருக்கும் பாதிப்பு ஏதும் இல்லை. அவர் அளித்த புகாரின் அடிப்படையில் அமிர்தசரஸ் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அமிர்தசரஸ் போலீஸ் கமிஷனர் குருப்ரீத் புல்லார் கூறியதாவது: அடிக்கடி இதுபோன்ற சம்பவங்களை நிகழ்த்துவது பாகிஸ்தானுக்கு வாடிக்கை. குற்றவாளியை பிடிக்க தீவிரமாக முயற்சித்து வருகிறோம் என்றார்.முதல்வர் பக்வந்த் மன் கூறுகையில், பஞ்சாபில் நிலவும் அமைதியை கெடுக்க சமூக விரோத சக்திகள் முயற்சித்து வருகின்றன. அதில் ஒரு பகுதியாக போதை மருந்து கடத்தல் உள்ளது. இந்தியாவிற்குள் அடிக்கடி டுரோன்களை பாகிஸ்தான் அனுப்பி வருகிறது. இதனால், அவர்களுக்கு இச்சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம். பஞ்சாப் அமைதியாக இருக்க வேண்டும் என அவர்கள் ஏன் விரும்புவர்?. இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
மார் 15, 2025 20:18

கோவில் ஊழியர் மீது ஆசிட் வீச்சு தெலங்கானாவில் பயங்கரம். இந்தியாவில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீண்டும் புகுந்துவிட்டனரா.. என்கிற சந்தேகம் எழுகிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை