உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சி; ரத்தன் டாடாவை நினைவு கூர்ந்தார் பிரதமர் மோடி!

ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சி; ரத்தன் டாடாவை நினைவு கூர்ந்தார் பிரதமர் மோடி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சிக்கு தொழிலதிபர் ரத்தன் டாடா மற்றும் ஒசாமு சுசுகி பெரும் பங்காற்றி உள்ளனர் என பிரதமர் மோடி தெரிவித்தார்.டில்லியில் இன்று (ஜன.,17) போக்குவரத்துக் கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இன்று முதல் ஜன.22 வரை 3 வெவ்வேறு இடங்களில் போக்குவரத்து கண்காட்சி நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்த கண்காட்சி நிகழ்ச்சியில் பல புதிய வாகனங்கள் அறிமுகப்படுத்தப்படும். இந்தியாவில் கார்களின் தேவை அதிகரித்து வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=mao4kkfh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஒரு வருடத்தில் 2.5 கோடி கார்கள் விற்பனையாகி உள்ளது. இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சிக்கு தொழிலதிபர் ரத்தன் டாடா மற்றும் ஒசாமு சுசுகி பெரும் பங்காற்றி உள்ளனர். இந்த இரண்டு ஜாம்பவான்களும் இந்திய நடுத்தர வர்த்தகத்தினரின் வாகனத்துறையில் கனவை நனவாக்க பெரிதும் உதவி உள்ளனர். வளர்ச்சி அடைந்த தேசமாக மாற இந்தியா பயணம் மேற்கொண்டு வருகிறது. 25 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர். இன்றைய இந்தியா முழுக்க, முழுக்க இளைஞர்களின் ஆற்றலை கொண்டுள்ளது. இந்தியாவின் ஆட்டோ மொபைல் துறை 12 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

அப்பாவி
ஜன 17, 2025 15:40

அசுர வளர்ச்சி. ரோடு ஓரமா நின்னு டீ குடிச்சாலே போதும். லாரி, பஸ், கார்ல வந்து போட்டுத் தள்ளிடறாங்க.


vivek
ஜன 17, 2025 16:41

உனக்கும் அந்த அதிர்ஷ்டம் இருக்கு கோவாளு


MARI KUMAR
ஜன 17, 2025 15:17

ரத்தம் டாடாவை என்றுமே மறக்க முடியாது அவர் செய்த திட்டங்கள் ஏராளம் உதவி செய்தது அளவில் அடங்காதது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை