உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ. 2 லட்சம் கோடியை தாண்டிய ஜிஎஸ்டி வசூல்: 16 சதவீதம் அதிகம்

ரூ. 2 லட்சம் கோடியை தாண்டிய ஜிஎஸ்டி வசூல்: 16 சதவீதம் அதிகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கடந்த மே மாதம் ஜிஎஸ்டி மூலம் ரூ.2.01 லட்சம் கோடி வசூல் ஆகி உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்து உள்ளது. இது கடந்த ஆண்டு மே மாதம் வசூல் ஆன தொகையை விட 16.4 சதவீதம் அதிகம் ஆகும்.இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த மே மாதத்தில்https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ozjxq23y&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மத்திய ஜிஎஸ்டி - ரூ.35,434 கோடிமாநில ஜிஎஸ்டி- ரூ.43,902 கோடிஒருங்கிணைந்த ஜிஎஸ்டி - ரூ.1.09 லட்சம் கோடிசெஸ் வரி- ரூ.12,879 கோடி என மொத்தம் ரூ.2.01 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் ஆகி உள்ளது.மே மாதத்தில், உள்நாட்டு பரிமாற்றம் மூலம் கிடைக்கும் வருமானம் 13.7 சதவீதம் அதிகரித்து ரூ.1.50 லட்சம் கோடியும்இறக்குமதி மூலம் கிடைக்கும் ஜிஎஸ்டி வருமானம் 25.2 சதவீதம் அதிகரித்து ரூ.51,266 கோடியும் வசூல் ஆகி உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.கடந்த ஆண்டு (2024) மே மாதம் ஜிஎஸ்டி மூலம் 1,72,739 கோடி ரூபாய் வசூல் ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஜிஎஸ்டி மூலம் ரூ.2.37 லட்சம் கோடி வசூல் ஆகி இருந்தது. தற்போது தொடர்ச்சியாக 2வதாக மே மாதம் ஜிஎஸ்டி வசூல் ரூ.2 லட்சம் கோடியை தாண்டி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

ஆரூர் ரங்
ஜூன் 02, 2025 12:00

பல்வேறு நாட்டு ரிசர்வ் வங்கிகளில் லாபம்/ நஷ்டம். . யு எஸ்- 77பில்லியன் டாலர்கள் நஷ்டம் .இங்கிலாந்து - $40 பில்லியன் நட்டம். ஆனால் இந்திய ரிசர்வ் வங்கி- $31 பில்லியன் லாபம். கடன் தள்ளுபடி செஞ்சிருந்தா இது சாத்தியமில்லை.


ஆரூர் ரங்
ஜூன் 02, 2025 11:20

கண்ணன் Isaac. நாட்டின் மக்கள் தொகையில் தமிழகத்தில் 6 சதவீதம் இருக்கும். ஜிஎஸ்டி வசூலும் இங்கு அதே ஆறு சதவீதம் (மொத்தம் .2,01,050 கோடியில்12,230 கோடி) இதிலென்ன பெருமை? வட மாநிலங்களில் நமக்கிருப்பது போல துறைமுக வசதி எதுவும் கிடையாது.. ஆண்டுக்கு 7 மாதங்கள் கடும் குளிர் அல்லது கடும் வெயில். போர் வந்தால் அவர்களுக்குத்தான் நேரடி பாதிப்பு. பாதுகாப்பான சூழலில் வாழ்த்து கொண்டு இதுபோல கருத்துப் போட கூடாது. எல்லா மாநிலங்களின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் தான் ஜிஎஸ்டி கவுன்சிலில் ஜிஎஸ்டி நிர்ணயிக்கப்படுகிறது


raman
ஜூன் 02, 2025 08:20

ஜி எஸ் டி வரியை தவிர்க்க பிராண்ட் பெயர் இல்லாத பொருளை வங்கலாமே பெருமைக்கு ஆசைப்பட்டு மால்களில் ஏன் வாங்குகிறீர்கள்


தாமரை மலர்கிறது
ஜூன் 01, 2025 22:46

வரி வளர்ச்சி நாட்டின் பொருளாதார வளர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது. உலகின் நாலாவது பெரிய பொருளாதாரமாக பணக்கார நாடாக இந்தியா வளர்ந்துள்ளது. இன்னும் ரெண்டே ஆண்டில், மூன்றாவது பெரிய பொருளாதார நாடாகமாறும். சம்பளம் மலைபோல் கிடுகிடுவென்று உயர்ந்துவருகிறது. சாமானிய மக்கள் மேனிக்குர் பெடிக்குர் செய்ய மேற்கத்திய நாடுகளுக்கு டிராவல் போகிறார்கள். விமானம் என்பது டவுன் பஸ் போன்றாகிவிட்டது. அடுத்த வருடம் ஜிஎஸ்டி ஐந்து லட்சம் கோடியை தாண்டும். நமது நாட்டின் வரிவருமானதை பார்த்து பல நாடுகள் பொறாமைப்படுகின்றன. பாதுகாப்பு வரி என்று இன்னும் பத்துசதவீதம் உயர்த்துவது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும்.


J.Isaac
ஜூன் 02, 2025 10:36

பொருளாதார வளர்ச்சி என்று தம்பட்டம் அடித்து என்ன பயன். நாட்டில் கிட்டத்தட்ட 70 கோடி பேர் மூன்று வேளை உணவிற்காக தவிக்கிறார்கள் என்று ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது


துர்வேஷ் சகாதேவன்
ஜூன் 01, 2025 22:22

எல்லாம் ஏழைகளின் கண்ணீர் , நம்மிடம் வசூலித்து தான் கார்பொரேட் கட்டுகிறான் அரிசிக்கு பருப்புக்கு GST வரி போட்டு பிடுங்கும் கூட்டம்


J.Isaac
ஜூன் 01, 2025 21:30

மக்களை வேதனை படுத்தி வரி வசூல் செய்வதை ஒரு சாதனையாக சொல்லுவது வேதனை


ஆரூர் ரங்
ஜூன் 01, 2025 22:02

இப்போ 2000 பொருட்களுக்கு GST வரியில்லை . வேதனையே முன்பு வரியே கட்டாமல் ஹவாலா கடத்தல்னு ஏய்த்துப் பிழைத்த மூர்க்ககூட்டத்திற்குதான். எல்லா மாநிலங்களும் ஒரு மனதாக தீர்மானிப்பது ஜிஎஸ்டி. யார் மீது பழி சுமத்துகிறீர்கள்?


துர்வேஷ் சகாதேவன்
ஜூன் 01, 2025 22:23

பெரிசு அரிசி பருப்பு என்னை க்கு GST போட்டால் 2 லட்சம் கோடி என்ன 3 லட்சம் கோடி வரும் ,அப்புறம் எப்படி 30 லட்சம் கோடி தள்ளுபடி கார்பொரேட் களுக்கு செய்ய முடியும்


Ramesh Sargam
ஜூன் 01, 2025 20:45

இந்த செய்தியை படித்துவிட்டு தமிழக முதல்வர் எங்களுக்கு கொடுக்கவேண்டிய பங்கை கொடுங்க என்று போர்க்கொடி தூக்குவார். கொடுத்தாலும் அதை முறையாக தமிழக மேம்பாட்டுக்கு பயன்படுத்தமாட்டார். எல்லாம் கட்சியினரிடையே பங்கு போடப்படும்.


Ramona
ஜூன் 01, 2025 19:08

5 லட்சம் கோடி வசூல் செய்ய வேண்டியதின் ,வெறும் 2 லட்ச கோடி வசூல் ஆனது பெரிய விஷயமல்ல. பாதி வியாபாரிகள் கேஷ் அண்ட் கேரி பிசினஸ் தாங்க செய்கிறார்கள்.


Kulandai kannan
ஜூன் 01, 2025 18:47

உடனே பங்கு பிரி, பங்கு பிரி என்று ஒரு திருட்டு கூட்டம் வருமே.


kannan
ஜூன் 01, 2025 18:40

மாநில வாரியாக வரிவசூல் செய்ததை சொன்னால்தான் சரியாக இருக்கும். யார் அதிகமாகக் கொடுக்கிறார்கள் அதிகப் பெறுகிறார்கள் என்பதையும் நேர்மையாகச் சொல்ல வேண்டும்.


ஆரூர் ரங்
ஜூன் 01, 2025 20:01

எப்போதுமே தமிழகத்தின் மக்கள் தொகை சதவீதம் அளவுக்கு மிக அதிகமாக இங்கு வசூலானதாக தகவல் இல்லை. அதிக பட்சம் ஏழெட்டு சதவீதம் மட்டுமே பார்த்திருக்கிறேன்.


ramesh
ஜூன் 01, 2025 22:23

அரூர்ரங் தாங்கள் மட்டும் gst குறைவாக நாட்டுக்கு செலுத்தலாம் . ஆனால் மற்ற தமிழர்கள் gst அதிகமாக செலுத்துகிறார்கள் என்பது தான் உண்மை . மக்கள் தொகை குறைந்த வளர்ச்சி அடைந்த தமிழ் நாட்டில் நிச்சயமாக அதிக gst செலுத்த படுகிறது . ஆனால் மக்கள் தொகை அதிகமான உத்ர பிரதேசத்தில் நிச்சயம் குறைவாக தான இருக்கும் . ஆனால் இங்கு வாங்கப்படும் வரி தமிழ் நாட்டுக்கு செலவழிக்காமல் உத்ர மற்றும் மத்திய பிரதேசத்தில் செலவழிக்க படுகிறது