உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜி.எஸ்.டி.,யில் சீர்திருத்தம் தொடரும் வரிச்சுமை குறையும்: பிரதமர் நரேந்திர மோடி உறுதி

ஜி.எஸ்.டி.,யில் சீர்திருத்தம் தொடரும் வரிச்சுமை குறையும்: பிரதமர் நரேந்திர மோடி உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கிரேட்டர் நொய்டா: ''ஜி.எஸ்.டி.,யில் சீர்திருத்தங்கள் தொடரும். நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சி அடையும் போது, மக்கள் மீதான வரிச்சுமையும் குறையும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி உறுதிபட தெரிவித்தார். உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள கவுதம் புத்தா நகர் மாவட்டத்துக்கு நேற்று வந்த பிரதமர் மோடி, கிரேட்டர் நொய்டா பகுதியில் நடந்த, 'உத்தர பிரதேச சர்வதேச வர்த்தக கண்காட்சி - 2025'ஐ துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: இன்று, நாடு பெருமையுடன், 'ஜி.எஸ்.டி., சேமிப்பு திருவிழா'-வை கொண்டாடுகிறது. இத்துடன் நாங்கள் நிற்க மாட்டோம். நாட்டின் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்துவோம். பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சி அடையும் போது, வரிச்சுமையையும் குறைப்போம். ஜி.எஸ்.டி.,யிலும் சீர்திருத்தங்கள் தொடரும். தற்சார்பு இந்தியா வருமான வரி விலக்கு, ஜி.எஸ்.டி., சீர்திருத்தங்களால், நாட்டு மக்கள் இந்த ஆண்டு மட்டும், 2.5 லட்சம் கோடி ரூபாய் சேமிக்க முடியும். பா.ஜ., அரசு வரிகளை குறைத்து, பணவீக்கத்தை கட்டுப்படுத்தி, வருமானம் மற்றும் சேமிப்பை அதிகரித்துஉள்ளது. இதனால், ஏழை எளிய மக்கள், நடுத்தர வர்க்கத்தினர் உட்பட அனைத்து தரப்பினரும் பயனடைந்துள்ளனர். இதை பொறுத்துக் கொள்ள முடியாத காங்கிரசும், அதன் கூட்டணி கட்சிகளும் தொடர்ந்து மக்களை குழப்பி வருகின்றன. உண்மை என்னவென்றால், மத்தியில் காங்., ஆட்சியில் இருந்த போது, 'வரி சுரண்டல்' நடந்தது. அதிக வரிகளால் சாதாரண மக்கள் மிகவும் கஷ்டப்பட்டனர். நாங்கள் வரிச்சுமையை குறைத்து, பணவீக்கத்தை கட்டுப்படுத்தி உள்ளோம். நாட்டின் லட்சியமும், வழிகாட்டும் மந்திரமும் 'தற்சார்பு இந்தியா' மற்ற நாடுகளைச் சார்ந்திருப்பது மிகப்பெரிய ஆபத்து. மாறி வரும் உலகில், ஒரு நாடு மற்ற நாடுகளை எவ்வளவு அதிகமாக சார்ந்திருக்கிறதோ, அவ்வளவு அதன் வளர்ச்சி சமரசம் செய்யப்படுகிறது. நம் நாடு தற்சார்பு அடைய வேண்டும். இங்கு தயாரிக்கக்கூடிய ஒவ்வொரு பொருளும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட வேண்டும். 'இந்தியாவில் தயாரிப்போம்; உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்போம்' என்ற கொள்கையை, தொழில் துறையினர் பின்பற்ற வேண்டும். உள்ளூரிலேயே பொருட்களை தயாரித்து விற்பனை செய்ய வேண்டும். நாட்டு மக்களும் உள்ளூர் பொருட்களையே வாங்க வேண்டும். வலு சேர்க்கும் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையின் கீழ், அனைத்து துறைகளிலும் உ.பி., வளர்ச்சி அடைந்து வருகிறது. நாட்டில் அதிக எண்ணிக்கையிலான விரைவுச்சாலைகள், சர்வதேச விமான நிலையங்கள் இங்கு உள்ளன. நாட்டின் மொத்த மொபைல் போன் உற்பத்தியில் 55 சதவீதம் உ.பி.,யில் நடக்கிறது. செமி கண்டக்டர் துறையில், நாட்டின் தற்சார்பு நடவடிக்கைக்கு உ.பி., வலு சேர்க்கும். அங்கு ஒரு பெரிய செமி கண்டக்டர் ஆலை விரைவில் செயல்படும். நம் ஆயுதப் படைகளும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை தான் பயன்படுத்தி வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

M.Sam
செப் 26, 2025 15:36

அடிக்க வேண்டியதை அடித்து விட்டு போ குறைப்பு கறுப்பு ற்று பின்னத்தினால் என்ன அர்த்தம் ஓகே ஓகே புரியுது அம்புட்டும் எலேச்டின் ஸ்டண்ட்


Natchimuthu Chithiraisamy
செப் 26, 2025 12:06

இந்த புரிதல் தமிழ் நாடு அரசுக்கு இல்லையே எடப்பாடி பழனிசாமி 4 லட்சம் கோடியுடன் கொடுத்த கடனை 5 ஆண்டுகளில் 9 லட்சம் கோடியாக்கி அதை அனைத்தையும் அவர்களே வைத்துக்கொண்டார்கள் நலத்திட்டம் எதுவும் மக்களுக்கு சேரவில்லை வரும் எலேச்டின் டைம் ஒட்டு போடா ஒருநாள் கூலி கொடுப்பார்கள் ஓட்டையும் வாங்கிவிடுவார்கள். அடுத்த ....................


திகழ்ஓவியன்
செப் 26, 2025 11:59

GST 28 % விதித்து சுமை ஏற்றியது யார் ?


velan
செப் 26, 2025 11:03

இன்சூரன்ஸ் க்கு வரியில் என்று நினைத்தேன் . ஆனால் இங்குதான் மிக நுணுக்கமான ஆப்பு வைத்துள்ளனர் . எனது பெற்றோர்கள் மெடிக்கல் இன்சூரன்ஸ் க்கும் 18% GST வரி கட்ட வேண்டுமாம் . தனி இன்சூரன்ஸ் மட்டுமே வரி இல்லயாம் . 71,616 + GST 18% = 12890 வரி . இதை எங்கு சொல்வது ... மத்திய அரசு இதெல்லாம் கொஞ்சம் கவனிக்கலாம் .


babu
செப் 26, 2025 11:00

ஜிஎஸ்டி வரி குறைப்பு பற்றி கணக்கு சரியா வரும் .. 3 5 12 18 28= 66% குறைப்பிற்கு முன் 3 5 18 40= 66% குறைப்பிற்கு பின்


Narayanan Muthu
செப் 26, 2025 10:51

பிஜேபிக்கு நல்லாவே தெரிந்திருக்கு இது நாள் வரை GST கொள்ளை அடித்ததை மக்கள் மறக்க மாட்டார்கள் என்று. அதை எப்படியாவது மூளை சலவை செய்து மக்களின் எண்ணங்களை மாற்றி விடலாம் என முயற்சி செய்கிறார்கள். GST வரி ஏற்றும்போது அது கவுன்சிலின் முடிவு என்றும் அதை சிறிதளவு குறைக்கும் போது அது மோடியின் முடிவு என்று கம்பி கட்டும் வேலையை ஆரமபித்துள்ளார்கள். நியாயமான தேர்தல் நடக்கும் பட்சத்தில் மக்கள் இவர்களுக்கு பாடம் புகட்டுவார்கள்.


தியாகு
செப் 26, 2025 14:54

அட பேக்கு, கொரோனா காலத்தில் மத்திய அரசு மக்களுக்காக செலவிட்ட பணமெல்லாம் வரி வசூலில் வந்ததுதான். அது இல்லையென்றால் மக்களுக்கு பணம் செலவிட எங்கிருந்து பணம் வரும் என்று யோசிக்க மாட்டாயா?


Mario
செப் 26, 2025 09:22

அப்போ இந்த 10 வருடம் ஜி.எஸ்.டி. யால் அடித்தது கொள்ளையா


தியாகு
செப் 26, 2025 08:56

பதினைந்து வருடங்கள் முதல்வராகவும், ஒன்பது வருடங்கள் பிரதமராகவும் இருந்திருந்தும் மோடிஜியின் மொத்த சொத்து மதிப்பு திமுகவின் அகில உலக துணை நடிகர் சூப்பர் ஸ்டார் வைத்திருக்கும் ஒரே ஒரு வெளிநாட்டு காரின் விலையைவிடவும் குறைவு. எப்படி இவ்வளவு சம்பாதித்தார் என்று எந்த ஒரு தமிழனும் தனக்குள் கேள்வி கேட்டு அறிவை வளர்த்துக்கொள்ளவில்லை. முதலில் நம் பக்கத்தில் இருக்கும் திருடர்களை கேள்வி கேட்டு தமிழர்கள் பழக வேண்டும். பிறகு ஆற அமர்ந்து உட்கார்ந்து இரண்டாயிரம் கிலோமீட்டர்கள் தாண்டி இருக்கும்


Raja k
செப் 26, 2025 08:55

உணவு பொருள் முதல்கொண்டு அனைத்து பொருட்கள் மேலும் 25% , 50% என வரியை போட்டது நீங்கதானே , இப்போ 2%, 3% குறைத்துவிட்டு, வரியை குறைத்துவிட்டோம், எல்லா பொருள்கள் விலையும் குறையும், மக்கள் பைகளில் பணம் நிறைய சேரும், ஜிஎஸ்டி கொண்டாடுங்கள்


Moorthy
செப் 26, 2025 08:13

பிஜேபி அடுத்தமுறை உ பி யில் ஆட்சிக்கு வரவேண்டும் என்றால் மக்கள் நல திட்டங்களை வு பி யில் செயல்படுத்த வேண்டும் , குறிப்பாக மாதம் ஆயிரம் ருபாய் பெண்களுக்கு... அஃகிலேஷ் பலம் பெற்று வருகிறார் .


புதிய வீடியோ