திருமலை பக்தர்களுக்கு உதவும் வழிகாட்டி செயலி அறிமுகம்
திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய திருமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, ‘வெங்கடாத்ரி’ எனும் டிஜிட்டல் வழிகாட்டி செயலியை திருமலை திருப்பதி தேவஸ்தானம் நேற்று அறிமுகம் செய்தது. ஆந்திராவின் திருப்பதி திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு வழிகாட்ட, ஆபத்து நேரங்களில் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள, ‘வெங்கடாத்ரி’ எனும், ‘மொபைல் போன்’ செயலியை மாநில முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் நேற்று தொடங்கி வைத்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6ig7gi40&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த செயலி, லட்டு விற்பனை மையங்கள், தங்கும் விடுதிகள், இலவச அன்னப்பிரசாத மையங்கள், தரிசன நுழைவு வழி கள், குடிநீர் மற்றும் அவசர மருத்துவ உதவி மையங்க ளுக்கு செல்வதற்கான துல் லியமான வழிகளை பக்தர்கள் கண்டறிய உதவும். திருமலையில் போதிய இணைய வசதி இல்லாத இடங்களிலும் கூட பக்தர்கள் இந்தச் செயலியை பயன்படுத்தும் வகையில், ‘ஆப்லைன்’ வசதியும் உள்ளது. தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், கன்னடம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் இந்தச் செயலி பக்தர்களுக்கான சேவைகளை வழங்குகிறது. திருமலையில், தங்கள் வாகனம் நிறுத்தப்பட்டு உள்ள இடத்தை பக்தர்கள் மறந்துவிடாமல் இருக்க, ‘ஜியோ டேகிங்’ முறையில் அந்த இடத்தை குறித்துக் கொண்டு எளிதில் கண்டறி யும் வசதியும் உள்ளது.