உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குஜராத்தில் தொடரும் கனமழை; 28 பேர் பலி; 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

குஜராத்தில் தொடரும் கனமழை; 28 பேர் பலி; 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆமதாபாத்: குஜராத்தில் இன்றும் கனமழை பெய்து வருவதால், 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கனமழையால் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர்.குஜராத்தில் இன்றும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. எங்கும் வெள்ளநீர் பெருக்கெடுத்து பாய்வதால் ரயில் மற்றும் சாலை போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது. அணைகள், ஏரிகள் நிரம்பி வழிவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சுவர் இடிந்தும், மழை வெள்ளத்தில் மூழ்கியும் கடந்த 26ல் ஏழு பேர் பலியாகினர். நேற்று முன்தினம் மேலும் ஒன்பது பேர் பலியாகினர். இதனால், பலி எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=y97hgxov&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

மீட்புப்பணி

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 23,000 பேர் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப்படையினர், ராணுவத்தினர், விமானப்படையினர், கடலோர காவல்படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், கரையோர மக்களுக்கு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். மீட்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், நகர்ப்புறங்களில் உள்ள சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளது.

ரெட் அலர்ட்

கச், துவாரகா, ஜாம்நகர், மோர்பி, சுரேந்திரநகர், ஜூனாகத், ராஜ்கோட், பொடாட், கிர்சோம்நாத், அம்ரேலி மற்றும் பாவ்நகர் ஆகிய 11 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், வடக்கு குஜராத், தெற்கு குஜராத் மற்றும் தெற்கு குஜராத் ஆகிய பகுதிகளுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

venugopal s
ஆக 29, 2024 15:48

குஜராத்தில் பாஜக ஆட்சியில் பாலும் தேனும் தெருக்களில் ஓடுகிறது என்றார்களே!


படேல்ஜீ
ஆக 29, 2024 14:12

குஜராத் மாடல். அண்ணாச்சியையும், தமிழ் மியூசிக் கையும் அனுப்பி பாக்கச் சொல்லலாம்.


Azar Mufeen
ஆக 29, 2024 11:59

இறந்தவர்களுக்கு நிம்மதி கிடைக்கட்டும்,சென்னை மோசம் என்று சொன்னவர்கள், பூலோக சொர்கம் குஜராத் பற்றி விமர்சனம் செய்ய வில்லையே,


beindian
ஆக 29, 2024 09:49

எங்கப்பா போனானுங்க இந்த பசங்களெல்லாம் ?


P. VENKATESH RAJA
ஆக 29, 2024 08:47

குஜராத் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை