உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தமிழகம் வரும் குஜராத் சிங்கங்கள்!

தமிழகம் வரும் குஜராத் சிங்கங்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு குஜராத்தில் இருந்து சிங்கங்களை வழங்க அந்த மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.சென்னையில் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் அனைத்து வகையான வனவிலங்குகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு இருந்த ஆசிய சிங்கம் உடல்நலக்குறைவால் உயிரிழந்து விட்டது. ஆசிய சிங்கம் அதிக எண்ணிக்கையில் இருக்கும் குஜராத் மாநிலத்தில் இருந்து கொண்டு வருவதற்கு பூங்கா நிர்வாகத்தினர் முயற்சி மேற்கொண்டனர்.இந்த நிலையில், குஜராத்தின் ஜூனாகட் நகரில் உள்ள சக்கார்பாக் விலங்கியல் பூங்கா, ஒரு ஆண், இரு பெண் சிங்கங்கள் மற்றும் ஒரு பெண் காட்டுக் கழுதையை , தேசிய விலங்கு பரிமாற்ற திட்டத்தின் கீழ், வண்டலூர் பூங்காவுக்கு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.இதற்காக, வண்டலூர் உயிரியல் பூங்கா, ஒரு இந்திய காட்டெருமை, வெள்ளை புலிகள் ஜோடி, சறுகு மான், வெள்ளை மயில் மற்றும் மஞ்சள் அனகோண்டாக்களை குஜராத்திற்கு அனுப்பும்.இது குறித்து வண்டலூர் உயிரியல் பூங்கா அதிகாரிகள் கூறுகையில், ' எங்களிடம் தற்போது 4 ஆண் சிங்கங்கள் மற்றும் 5 பெண் சிங்கங்கள் உள்ளன, ஆனால் அவை எதுவும் தூய இனத்தைச் சேர்ந்தவை அல்ல. குஜராத்தில் இருந்து ஆசிய ஆண் சிங்கங்களைப் பெறுவது ஒரு தனித்துவமான மரபணு தொகுப்பை உருவாக்க எங்களுக்கு உதவும்,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

sankaranarayanan
செப் 08, 2025 21:07

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு குஜராத்தில் இருந்து சிங்கங்களை வழங்க அந்த மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அரசியலில் குஜராத் மோடி என்ற சிங்கத்தை பாரத நாட்டிற்கே அர்பணித்துள்ளது இதைவிட வேறு எந்த சிங்கம் எங்கே சென்றால் என்ன


Narayanan Muthu
செப் 08, 2025 19:35

மனித அசிங்கங்கள் வராமல் இருந்தால் சரி. அப்படியே வந்தாலும் தமிழர்கள் விரட்டி அடிப்பார்கள் என்பது வேறு கதை.


Kulandai kannan
செப் 08, 2025 17:25

குஜராத்தி லிருந்து சிங்கம், தமிழகத்திலிருந்து எருமை.


venugopal s
செப் 08, 2025 15:04

ஏற்கனவே உள்ள இரண்டு குஜராத் (அ) சிங்கங்கள் போதாதா?


Vasan
செப் 08, 2025 13:53

Already they had Srilankan tigers, there in Tamilnadu.


Barakat Ali
செப் 08, 2025 13:38

ஏற்கனவே ஒரு சிங்கம் அடிக்கடி தமிழகம் வந்து செல்வதால், தமிழின், தமிழரின் பெருமையைக் கூறுவதால் தமிழகத்தில் உள்ள சிறுநரிகள், ஓநாய்கள் கதறி வருகின்றனவே ????


Artist
செப் 08, 2025 12:58

குஜராத் சிங்கம் இந்த அசிங்கங்குளுடன் ஒத்து போகுமா


Pats, Kongunadu, Bharat, Hindustan
செப் 08, 2025 12:38

"ஆனால் அவை எதுவும் தூய இனத்தைச் சேர்ந்தவை அல்ல." சிங்கம் புலியெல்லாம் தூய இனமா இருக்கணும். ஆனால் வெவ்வேறு ஜாதிகளெல்லாம் கலப்பு திருமணம் செய்து தமிழகம் அவியல் ஆகணும். தனித்துவத்தை இழந்து பெரியார் திராவிட கிச்சடியாக மாறும் தமிழினம். நல்லா வருவீங்க தமிழர்களே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை