உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் - பயங்கரவாதிகள் கடும் துப்பாக்கிச் சண்டை

காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் - பயங்கரவாதிகள் கடும் துப்பாக்கிச் சண்டை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்:காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் - பயங்கரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.காஷ்மீரின் மஜல்டா பகுதியில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் உள்ளதாக உளவுத்துறையினர் அளித்த தகவலின்படி ராணுவம் மற்றும் சிஆர்பிஎப் அடங்கிய பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். உடனடியாக பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கு இடையே கடுமையான மோதல் நடந்து வருவதாக காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த பகுதியில் 2 - 3 பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ள காஷ்மீர் போலீசார், பயங்கரவாதிகள் தப்பிசெல்ல முடியாத வகையில் கூடுதல் பாதுகாப்புப் படையினர் அந்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Kasimani Baskaran
டிச 16, 2025 04:11

பெருமளவில் முன்னாள் ராணுவத்தினர்களை குடியேற்றவில்லை என்றால் காஷ்மீருக்கு என்றுமே தீவிரவாத அச்சுறுத்தல் உண்டு.


Nachiar
டிச 15, 2025 20:26

பாரதம் வாழ அன்னையை காக்கும் எல்லா ஸ்வாமிகளையும் போற்றி புகழ்ந்து இருப்போம் அவர்கள் பாதுகாப்புக்கு பிராத்தனை செய்வோம். முகத்திற்கு மாற்று போட்டு யாரோ எழுதிய வசனங்களை பேசும் அட்டைக்கு கத்தி வீரர்களை விட்டுவிட்டு உண்மையான வீரர்களை முன்மாதிரியாக எடுத்துக்கொள்வோம். ஓம் நமசிவாய. ஜெய் ஹிந்


சமீபத்திய செய்தி