உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சோபியானில் என்கவுன்டர்: லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை

சோபியானில் என்கவுன்டர்: லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: சோபியானில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.போர் நிறுத்தம் அமலில் இருந்தாலும், பாகிஸ்தான் ஆக்கிமிரப்பு எல்லையில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவரும் பயங்கரவாதிகளை அழிக்கும் நடவடிக்கைகளை இந்திய ராணுவம் மேற்கொண்டு வருகிறது. பஹல்காம் சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதிகளை தீவிரமாக தேடி வரும் இந்திய ராணுவம், அவர்களது தலைக்கு ரூ.20 லட்சம் வெகுமதி அறிவித்துள்ளது.இந்நிலையில் சோபியான் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையத்து, அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.அப்போது மறைவிடம் ஒன்றில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் சிலர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். சுதாரித்துக் கொண்ட பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதலில் இறங்கினர். இரு தரப்பிலும் நீடித்த துப்பாக்கிச் சண்டையின் முடிவில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுகுறித்து பாதுகாப்பு படை உயரதிகாரிகள் கூறியதாவது; தெற்கு காஷ்மீர் சுக்ரு வனப்பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனடியாக தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினோம். எங்களுடன் போலீசாரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பயங்கரவாதிகள் எங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். நாங்களும் பதிலடி தந்தோம். லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அடையாளம் தெரிந்தது

கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் இருவரின் அடையாளம் தெரியவந்துள்ளது.இது தொடர்பாக பாதுகாப்புப் படை வட்டாரங்கள் கூறியதாவது: முதலாவது நபர் ஷோபியான் மாவட்டத்தின் ஹீரபோரா பகுதியை சேர்ந்த ஷாகித் குட்டாய். இவன் 2023 மார்ச் 08 ல் லஷ்கர் இ தொய்பாவில் இணைந்துள்ளான். கடந்த 2024 ஏப்.,08 ல் இரண்டு ஜெர்மன் சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட 3 பேர் காயமடைய காரணமான துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு காரணமானவன் 2024 மே 18 ல் ஹீரபோரா பஞ்சாயத்து தலைவர் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்பு உள்ளது.இரண்டாவது பயங்கரவாதி ஷோபியானின் மெல்ஹோரா பகுதியைச் அத்னன் ஷபி தர். இவன் 2024 அக்., 18 ல் லஷ்கர் இ தொய்பாவில் இணைந்துள்ளான். சோபியனின் வாஷி பகுதியில் காஷ்மீரி அல்லாத தொழிலாளர்களை கொன்ற சம்பவத்தில் இவனுக்கு தொடர்பு உண்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

A1Suresh
மே 14, 2025 00:20

உடல்களை அண்ணன் சீமான் வீட்டிற்கு பார்சல் செய்து விடுங்கள். இறுதிசடங்குகளை நாம் டமளர்கள் பார்க்கவேண்டுமாம்


பெரிய ராசு
மே 13, 2025 18:38

அப்படியே தினமும் ஒரு 10 பேரை போட்டுத்தள்ளுங்க அப்பத்தான் புத்தி வரும்


என்றும் இந்தியன்
மே 13, 2025 16:55

பாகிஸ்தான் ஆக்கிமிரப்பு எல்லையில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவரும் பயங்கரவாதிகளை???அவர்கள் திங்க தங்க ........... உதவுவது யார்???கண்டேன் சுட்டேன் என்று அவர்களையும் செய்யுங்கள் இது உடனே அடங்கிவிடும்.


S.L.Narasimman
மே 13, 2025 14:01

ஒவ்வொரு தீவிரவாதியை கொல்லும் ராணுவவீரருக்கும் 10 லட்ச ரூபாய் ஊக்கதொகை வழங்கவேண்டும்.


veeramani hariharan
மே 13, 2025 14:36

Good suggestion. The unit which is killing the terrorists are to be given cash prize


முக்கிய வீடியோ