மேலும் செய்திகள்
கோவிலில் திருவிளக்கு பூஜை
18-Aug-2025
பாலக்காடு: குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, சுதாகரன் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கேரளாவில் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மேல்சாந்தி எனப்படும் தலைமை அர்ச்சகர், தேர்வு நடப்பது வழக்கம். அக்டோபர் மாதம் முதல் அடுத்த ஆறு மாதத்திற்கான மேல்சாந்தி தேர்வு நேற்று கோவில் நமஸ்கார மண்டபத்தில் நடந்தது. தேவஸ்தான நிர்வாக குழு தலைமையில் நடந்த நேர்முகத் தேர்வில், தகுதி பெற்ற, 51 விண்ணப்பதாரர்களின் பெயர்களை வெள்ளி குடத்தில் இட்டு, குலுக்கல் முறையில் தேர்வு நடந்தது. இதில், பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த சுதாகரன் நம்பூதிரி, 59, மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப் பட்டார்.
18-Aug-2025