உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கனரா வங்கியின் சமூக வலைதள பக்கத்தில் ஊடுருவிய ஹேக்கர்கள்

கனரா வங்கியின் சமூக வலைதள பக்கத்தில் ஊடுருவிய ஹேக்கர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கனரா வங்கியின் எக்ஸ் சமூக வலைதள பக்கத்தை ஹேக்கர்கள் முடக்கி உள்ளனர்.நாட்டின் பொதுத்துறை வங்கியான கனரா வங்கியின் எக்ஸ் சமூக வலைதள பக்கத்தை 2.55 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். இந்நிலையில், இந்த பக்கத்திற்குள் ஊடுருவிய ஹேக்கர்கள் அதன் யூசர்நேமை மாற்றிவிட்டனர்.இது தொடர்பாக கனரா வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: வங்கியின் எக்ஸ் சமூக வலைதள பக்கத்திற்குள் ஹேக்கர்கள் ஊடுருவி உள்ளனர். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த பக்கத்தை மீட்க எக்ஸ் நிறுவனத்துடன் பேசி வருகிறோம். இந்த பிரச்னை சரி செய்யப்பட்டதும் அறிவிப்பு வெளியாகும். அதுவரை எந்த தகவலையும் எக்ஸ் பக்கத்தில் அளிக்க வேண்டாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி