உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹத்ராஸ் சம்பவம்: முதல்வர் யோகி நேரில் ஆறுதல்; உடல்களை பார்த்து உயிரைவிட்ட போலீஸ்

ஹத்ராஸ் சம்பவம்: முதல்வர் யோகி நேரில் ஆறுதல்; உடல்களை பார்த்து உயிரைவிட்ட போலீஸ்

லக்னோ: கூட்டநெரிசலில் சிக்கி காயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இதற்கிடையே, மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த 30 வயது போலீஸ், சடலங்களை கண்டு, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஹத்ராஸ் மாவட்டத்தின் சிகந்த்ரா ராவ் பகுதியில் உள்ள புல்ராய் என்ற கிராமத்தில் திறந்தவெளியில் போலே பாபா என்பவரின் ஆன்மிக சொற்பொழிவு கூட்டம் நேற்று நடந்தது. போலே பாபா பேசி முடித்ததும், கூட்டத்தில் பங்கேற்றவர்கள் ஒருவரையொருவர் முண்டியடித்துக் கொண்டு வெளியேறினர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=w4gb54po&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த கூட்ட நெரிசலில் சிக்கி, 116 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர், பெண்கள் மற்றும் குழந்தைகள். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், காயமடைந்தோரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். காயமடைந்தவர்களை மருத்துவமனையில் இன்று(ஜூலை 03) யோகி ஆதித்யநாத் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

நீதி விசாரணை

பின்னர் செய்தியாளர்களிடம் யோகி ஆதித்யநாத் கூறியதாவது: மொத்தம் 121 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்கள் உ.பி., ஹரியானா, ம.பி., ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள்; 6 பேர் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். காயமடைந்த 31 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், கிட்டத்தட்ட அனைவரும் ஆபத்தான நிலையில் உள்ளனர். நான் நேரில் சென்று பலருடன் பேசினேன். நிகழ்ச்சி முடிந்ததும், போலே பாபா என்ற சாமியார் மேடையிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தபோது, ​​திடீரென்று பல பெண்கள் அவரைத் தொட்டு வணங்க முன்னோக்கி சென்றுள்ளனர். அவர்களை தடுத்து நிறுத்தியதால், இந்த விபத்து நடந்துள்ளது. ஏடிஜி ஆக்ரா தலைமையில் எஸ்.ஐ.டி., விசாரணையை அமைத்துள்ளோம். ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தவும் மாநில அரசு முடிவு செய்துள்ளது. நிர்வாகம் மற்றும் காவல்துறையின் ஓய்வுபெற்ற மூத்த அதிகாரிகளும் இதில் ஒரு அங்கமாக இருப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

உயிரைவிட்ட போலீஸ்

ஹத்ராஸில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த 30 வயது போலீஸ், சடலங்களை கண்டு, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Kanagaraj M
ஜூலை 03, 2024 17:04

போலி சாமியார் கூட்டங்களுக்கு அனுமதி தரக்கூடாது. அந்த போலி சாமியார் தலைமறைவாகவுள்ளார்.


ஆரூர் ரங்
ஜூலை 03, 2024 15:29

ஸ்வாமிஜியின் காலில் விழவும் காலடி (புனித) மண்ணை எடுக்கவும் ஏராளமான பக்தர்கள் திடீரென பாய்ந்துள்ளனர். காவலர்கள் இருந்திருந்தாலும் ஒன்றும் செய்திருக்க இயலாது.


கனோஜ் ஆங்ரே
ஜூலை 04, 2024 19:24

அண்ணாத்தே... அவன் மிதிச்ச நாத்தம் புடிச்ச காலடி மண்ண எடுக்கப் போய்... செத்து போன 121 பேரும் “இந்து”தானய்யா... அவனுங்க என்ன முஸ்லீமா...? கூலா சொல்ற சுவாமிஜி காலடி மண்ணு... யோவ், மனசாட்சியே இல்லையா உனக்கு...? ஆமா, இந்த சாமிஜி வேலைய விட்டு ஓடிப்போன போலீஸ் கான்ஸ்டபிளா... இப்படி... போலீஸ்காரனையெல்லாம் சுவாமிஜி..ன்னு அழைத்து... விஸ்வாமித்தரையும், வசிஷ்டரையும் அதே வாயால சுவாமிஜி..ன்னு கூப்பிடுறியே... வெட்கமாயில்ல...?


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 03, 2024 14:44

உயிரை விட்ட போலீஸ் ?? ரொம்ப நல்ல போலீசு போலிருக்கு ..........


LION Bala
ஜூலை 03, 2024 13:56

உத்திரபிரதேசத்தில் 116 பேர் இறந்தவர்களுக்கு அனுதாபப்படவோ காயம்பட்டவர்களுக்கும் ஆறுதல் கூறவோ இங்கே தளத்தில் ஒருவரும் இல்லையா. காவலர் ஒருத்தர் இந்த துயர சம்பவத்தைப் பார்த்து இறந்து விட்டார். இவ்வளவு பெரிய கூட்டம் நடக்கும் பொது போதிய பாதுகாப்பும் அவசியம் தானே? மக்கள் வெளியே வரும் வழி எத்தனை உள்ளது என்பதை எல்லாம் பார்க்காமல் அனுமதி யார் கொடுத்தார்கள்? இத்தனை மக்கள் இறப்புக்கு காரணமானவர்கள் யார்? உ பி பொறுப்பேற்குமா .....


கனோஜ் ஆங்ரே
ஜூலை 03, 2024 13:18

119 பேர் செத்து போயிருக்காங்க...? கூவுவதற்கு எவனையும் ஆளைக் காணோம்...? இதே தமிழ்நாட்டில் நடந்திருந்தா... கூவோ கூவு...ன்னு கூவி கும்மி அடிச்சிருப்பானுங்க...?


தமிழ் மைந்தன்
ஜூலை 03, 2024 13:47

66 perukku


தமிழ்வேள்
ஜூலை 03, 2024 14:54

அண்ணாதுரை செத்தபோது , சொல்ல சொல்ல கேட்காமல் , ரயில் கூரையில் பயணம் செய்து , இறக்கிவிட்டு போலீசை அடித்து , பின்பு கொள்ளிடம் பால இரும்பு கரடர்களில் மண்டை மோதி , சிதைந்து செத்தது திராவிடன் வரலாறு ....கும்பல் மனநிலை வந்தால் , யாரையும் காப்பாற்றவோ , திருத்தவோ இயலாது ..அது எந்த ஒரு மாநிலம் , நாடாக இருந்தாலும் சரி .


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 03, 2024 15:37

வருடாவருடம் நடக்கும் கள்ளச்சாராய சாவுகளையும், திட்டமிடாமல் நடந்த விபத்தையும் அறிவாளிகள் சாப்பிடலாமா ???? முன்னேறிய மாநிலம் ஒன்றில் ஏ ஆர் ரஹ்மான் இசைநிகழ்ச்சியில் நடந்த அவலம் நினைவிருக்கா ????


Senthoora
ஜூலை 03, 2024 13:03

50 பேர் இறந்தார்கள், இதுக்கு தமிழ்நாடு எதிர்க்கட்சிகள் என்ன சொல்லபோகுது, உத்தரபிரதேச ஆட்சிய கலைத்துவிடுங்க என்று சொல்ல தைரியம் இருக்கா.


Anbu Raj
ஜூலை 03, 2024 13:32

திமுக தானே எதிர்க்கட்சி, கேளுங்க சார் நாக்கை பிடுங்குகிற மாதிரி, நீங்க என்ன சொன்னாலும் இந்த டிராவிடியன்ஸ் கட்சி கேட்க மாட்டாங்க? ஏன்னா டிராவிடியன்சும் சங்கியும் ஒண்ணுதான் அடிக்கிறமாதிரி அடிப்பேன் அழுகிறமாதிரி நடிக்கணும் இதுதான் அவங்க அரசியல், இதுதெரியாம நெறய பேர் இவர்கள் தான் சிறுபான்மையினரின் பாதுகாவலர்கள் என்று நம்புவதுதான் தமிழ்நாட்டில் கேலிக்கூத்து .


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி