உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹரியானா வெற்றி: 200 நாட்களில் சாதித்தார் சைனி!

ஹரியானா வெற்றி: 200 நாட்களில் சாதித்தார் சைனி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சண்டிகா்: ஹரியானா மாநில முதல்வராகி, வெறும் 200 நாட்களில், அரசு நலத்திட்டங்களால், மக்களின் நம்பிக்கையை முழுவதுமாக பெற்று, பா.ஜ.க.,வுக்கு மூன்றாவது முறையாக ஹாட்ரிக் வெற்றியை கொடுத்துள்ளார் நயாப் சைனி.ஹரியானா மாநிலத்திற்கு கடந்த அக்.,5 ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்தது. பதிவான ஓட்டுக்கள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் பா.ஜ.க., 48 தொகுதிகளில் முன்னிலை பெற்று மூன்றாவது முறை ஆட்சியை தக்கவைத்தது.லோக்சபா தேர்தல் வருவதற்கு 2 மாதம் முன்னர் தான், மாநில முதல்வராக இருந்த மனோகர்லால் கட்டார்க்கு பதிலாக, முதல்வர் ஆனார். மனோகர்லால் கட்டார் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு பின்னர் மத்திய அமைச்சர் ஆகிவிட்டார்.லோக்சபா தேர்தல் முடிந்து 5 மாதங்களில் மாநில சட்டசபைக்கு தேர்தல் வந்துவிட்டது. லோக்சபா தேர்தலில் பா.ஜ.க.,வுக்கு 5 இடங்கள் தான் கிடைத்தது. 10 ஆண்டு ஆட்சியில் அரசுக்கு எதிர்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இது மாநில பா.ஜ.க.,வுக்கு மிகவும் நெருடலாக இருந்தது.இந்த நிலையில் தான் இன்று, பா.ஜ.,வுக்கு வெற்றி கிடைத்தது. இது ஹரியானாவில் பா.ஜ.,வுக்கு வரலாற்று வெற்றியாக பார்க்கப்படுகிறது. அரசுக்கு எதிரான எதிர்ப்புக்களையும், கட்சிக்குள்ளும் இருந்த சவால்களையும் திறமையாக கையாண்டு வெற்றி கண்டுள்ளார் நயாப் சைனி.பா.ஜ.க., வெற்றி குறித்து முதல்வர் சைனி கூறியதாவது:இந்த வெற்றி, எனது பலமான தலைமைக்கும் பொறுப்புக்கும் கிடைத்த வெற்றி. நான் தோல்வி அடைந்து இருந்தால் நானே பொறுப்பு. ஆனால் இந்த போட்டியில்,எங்களது வெற்றி உண்மையான வெற்றி.பிரதமர் மோடியில் தலைமையின் கீழ், அவரது ஆசிர்வாதம் மற்றும் ஆலோசனையின் கீழ் இந்த வெற்றி சாத்தியமானது. குருஷேத்திர போரில் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடந்த போட்டியில் இறுதியில் தர்மமே வென்றது.இவ்வாறு சைனி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

RAAJ68
அக் 09, 2024 09:27

இது ஒன்றும் மாபெரும் வெற்றி அல்ல. போட்டு வித்தியாசம் மற்றும் சதவிகிதத்தை மனதில் கொள்ளவும். ரொம்ப ஆட்டம் போடாதீங்க கடவுள் இன்று வாலை ஒட்ட நறுக்கி விடுவார்.


mahalingamssva
அக் 08, 2024 19:21

வாழ்த்துக்கள்...


ஆரூர் ரங்
அக் 08, 2024 18:57

நன்று. ஒரு பிரச்சினை என்னவென்றால் காபி குடிக்கிற மாதிரி அங்கே கட்சி மாறுவது சகஜம். மூன்றே எம்எல்ஏ கூடுதல் என்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஆனாலும் ஆண்டுக்கணக்கில் பெரிய அளவில் போலி விவசாயிகள் போராட்டம் நடந்தும் மக்கள் எதிர்த்து வாக்களிக்கவில்லை. பிஜெபி மீது அவ்வளவு நம்பிக்கை.


Abhivadaye
அக் 08, 2024 18:55

ஈ வீ ம் மேல சந்தேகம் பாஜக ஜெயிச்சா. காங்கிரஸ் ஜெயிச்சா ஈ வீ ம் குட்


Sivakumar
அக் 08, 2024 19:43

காங்கிரஸ் ஜெயிச்ச இலவசங்களை வாரிவழங்கி ஜெயிச்சிட்டாங்க, ஆனா பிஜேபி ஜெயிச்ச, அவிங்க அறிவிக்க இலவசங்களைப்பத்தி பேசாம EVM குறைசொல்ற மாதிரி தான்.


சமீபத்திய செய்தி