உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளுங்கள்; ஆந்திரா முதல்வர் சந்திரபாபு அறிவுரை

அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளுங்கள்; ஆந்திரா முதல்வர் சந்திரபாபு அறிவுரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அமராவதி: 'தென்னிந்தியாவில் முதியோர் அதிகரித்துள்ளனர். இளம் தம்பதிகள் கூடுதலாக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்' என ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது தொடர்பாக, ஆங்கில செய்தி சேனலுக்கு சந்திரபாபு நாயுடு அளித்த பேட்டி: தென் மாநிலங்களில் கருவுறுதல் விகிதம் குறைந்து வருகிறது. இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தகுதியுடையவர்கள் என்ற சட்டத்தை கொண்டு வர மாநில அரசு யோசித்து வருகிறது. அதிக குழந்தைகளை கொண்ட குடும்பங்களுக்கு அரசு கூடுதல் சலுகைகளை வழங்கக்கூடும். தென்னிந்தியாவில் முதியோர் அதிகரித்துள்ளனர். இளம் தம்பதிகள் கூடுதலாக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். முதியோர் அதிகரிப்பது தேசிய பிரச்னை. ஜப்பான், சீனா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகள் ஏற்கனவே முதியோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் பொருளாதார சுமையுடன் சிக்கித் தவிக்கின்றன. பிறப்பு விகிதம் தொடர்ந்து குறையும் பட்சத்தில் இந்தியாவையும் பாதிக்கும் சூழ்நிலை உள்ளது. ஆந்திரா மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள பல கிராமங்களில், வயதானவர்கள் மட்டுமே உள்ளனர். இளைய மக்கள் நகரங்களுக்குச் சென்றுவிட்டனர். இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள விரும்பும் தம்பதிகளுக்கு ஊக்கத்தொகைகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

spr
அக் 21, 2024 20:18

உறவுகள் அருகி வருகின்றன. ஒரு குடும்பத்தில் குறைந்தது இரண்டு குழந்தைகளாவது இருப்பது நலம். இரண்டுக்கும் மேல் அதிகம் பெற்றால் அதற்கேற்ப குடும்ப வருமானம் உயர வழி வேண்டும். புதிய தொழிற்சாலைகள் இல்லை படித்த படிப்பிற்கேற்ற அறிவும் இல்லை வேலை வாய்ப்பும் இல்லை இப்படி நேர்மையாக வருமானம் ஈட்ட வாய்ப்புக்கள் இல்லாது போனால் லஞ்சம் இன்னமும் அதிகமாகும்


S.Murali
அக் 21, 2024 12:30

குடும்ப வருமானம் ? போதுமா உலகம் ஏற்கனவே ஏழை நாடு என்று ESUKIRARKAL


பேசும் தமிழன்
அக் 21, 2024 08:29

ஏற்கெனவே மார்க்க ஆட்கள் ...வதவதவென பிள்ளைகளை பெற்று தள்ளுகிறார்கள் .....நீங்கள் வேற அதிக பிள்ளைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லி விட்டீர்கள் .....இது எங்கே போய் முடியுமோ ???


PARTHASARATHI J S
அக் 21, 2024 06:38

முஸ்லீம்கள் தங்கள் மதத்தவர்களை தவறாக நடத்துகிறார்கள். அசுரகுணங்களை விட வேண்டும். திமுகவோடு சேராமல் பகுத்தறிவோடு செயல்பட வேண்டும். எல்லா மதத்தவர்களையும் நேசிக்க வேண்டும். தாய்மொழிக்கும், தாய்நாட்டிற்கும் நல்லது செய்ய வேண்டும்.


Rasheel
அக் 20, 2024 20:11

ஆந்திராவில் தொழில்களே கிடையாது. அனைவரும் ஹைதராபாத் வந்து வேலை செய்கின்றனர். இந்த லக்ஷணத்தில் ஒரு மார்க்கம் மட்டுமே பிள்ளைகளை பெற்று தள்ளுகிறது.


sugumar s
அக் 20, 2024 19:26

the additional benefit accruing to family more than 2 child should be continuous as they have to bring up them and govt should also consider some govt. job for above 2 as per the qualification


R SRINIVASAN
அக் 20, 2024 18:55

தகுதியின் அடிப்படையில் எல்லோருக்கும் கல்வி வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்று அறிக்கை விட்டால் வெளிநாட்டுக்குச்செல்லும் இளைஞர்கள் இந்தியாவிலேயே வேலை தேடிக்கொள்வார்கள் .இதற்காக ஜனத்தொகையை கூட்டவேண்டிய அவசியம் இல்லை


Srinivasan K
அக் 20, 2024 23:11

private sector is giving jobs on merit india has a better position, more us jobs to come to India you are already seeing onsite jobs in most IT service companies


Easwar Kamal
அக் 20, 2024 18:00

இந்த நாயுடுவுக்கு நடிகன் பவன் கல்யாண் இந்த ரெண்டு பேருக்கும் வேறு வேலையே கிடையாது. இந்த ஆந்திராவை வைத்து என்ன விளையாட்டு விளையாடினீங்க. இப்போ கேரளாவை விட சின்ன மாநிலம் ஆகிவிட்டது. இந்த சின்ன மையத்துக்கு 2 முதல் அமைச்சர் தெலுங்கானா பக்கம் போக முடியாது. போனால் அடி கிடையக்கும். பவன் இல்லாமல் அடுத்த எலெிக்சன் போக முடியாது. கண்டிப்பாக ஜெகன்னிடம் தோத்து போவோம். அந்த நடிகனோடு வேண்ாட வெறுப்பாக ஆட்சி போய்கிட்டு இருக்கு. அதுனாலதான் இப்படி ஸ்டேட்மெண்ட் வந்து கொண்டு இருக்கிறது.


என்றும் இந்தியன்
அக் 20, 2024 17:27

அப்போ டைரக்டாக முஸ்லிம்களுக்கு ஆதரவு தருவது போல இருக்கின்றதே


ஆரூர் ரங்
அக் 20, 2024 17:11

வக்ஃபு சட்டத்தை ஏற்கத் தயங்கின போதே எதிர்பார்த்ததுதான்.


முக்கிய வீடியோ