உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரொட்டி சாப்பிட்டு அமைதியாக வாழுங்கள், இல்லை எனில் தோட்டா பாயும்: பாக்.கிற்கு பிரதமர் எச்சரிக்கை

ரொட்டி சாப்பிட்டு அமைதியாக வாழுங்கள், இல்லை எனில் தோட்டா பாயும்: பாக்.கிற்கு பிரதமர் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பூஜ்; நீங்கள் உங்களின் ரொட்டியை சாப்பிட்டு நிம்மதியாக இருங்கள். இல்லை என்றால் எங்களின் தோட்டா அங்கே இருக்கும் என்று பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.தமது சொந்த மாநிலமான குஜராத்திற்கு பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ளார். அங்கு பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். வதோதரா பகுதியில் வாகன பேரணி மேற்கொண்டார். தொடர்ந்து பூஜ் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: மே 9ம் தேதி இரவு பாகிஸ்தான் நம் நாட்டு மக்களை குறி வைத்து தாக்க முயன்றது. அதன் பின்னர், இந்திய ராணுவம் சக்திவாய்ந்த ஒரு இரட்டை பலத்துடன் எதிர் தாக்குதலை நடத்தியது.வறுமையை ஒழிப்பதிலும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தி வருகிறோம். ஆனால், அவர்கள் (பாகிஸ்தான்) இந்தியாவுக்கு எதிரான வெறுப்பை பரப்புவதிலும், தீங்கு ஏற்படுத்துவதிலும் குறியாக உள்ளனர். ஆபரேஷன் சிந்தூர் என்பது ஒரு ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல. இந்திய மக்கள் உணர்வுகளின் ஆழமான வெளிப்பாடு. பயங்கரவாத நடவடிக்கைக்கு எதிரான ஒரு பலமான சமிக்ஞை.பஹல்காம் பயங்கரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கும் வரை நாங்கள் 15 நாட்கள் காத்திருந்தோம். அவர்கள் அவ்வாறு செய்யாத போது, ஆயுதப்படைகளுக்கு முழு சுதந்திரம் அளித்தேன். நமது படைகளின் வீரமும், துணிச்சலும் தான் பாகிஸ்தானை வெள்ளைக் கொடியை அசைக்க வைத்தது. எங்கள் இலக்கு என்பது உங்களின் பயங்கரவாத உள்கட்டமைப்பு தான் என்று ஏற்கனவே அவர்களிடம் கூறி இருந்தோம். இப்போது நீங்கள் தவறு செய்துவிட்டீர்கள், அதன் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும். பயங்கரவாதம் என்னும் நோயில் இருந்து பாகிஸ்தான் மக்களை விடுவிக்க, அங்குள்ள இளைஞர்கள் முன்வரவேண்டும். நீங்கள்(பாகிஸ்தான்) அமைதியான வாழ்க்கையை விரும்பினால் உங்கள் ரொட்டியை சாப்பிடுங்கள். இல்லை என்றால் எங்கள் தோட்டா எப்போதும் தயாராக இருக்கும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Kannan
மே 27, 2025 09:49

பாகிஸ்தான் திருந்திவிடும் என்று நம்புகிறீர்களா சார்.... அந்த நாடு தனது குழியை தானே தோண்டிக்கொண்டு உள்ளது...விரைவில் அதில் அடக்கமாகும். ஜெய்ஹிந்த்.


Saai Sundharamurthy AVK
மே 26, 2025 23:22

இந்தியாவின் ராணுவ வலிமையை சீண்டிப் பார்க்க வேண்டும் என்று நினைத்து அமெரிக்கா, பாகிஸ்தான், சீனா, துருக்கி போட்ட கணக்குகள் தப்பாகிப் போய் இப்போது அவர்கள் தலையிலேயே மண் அள்ளிக் போட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் விமானம் மற்றும் ஆயுத விற்பனை எல்லாம் உலகெங்கும் கேள்விக்குறியாகி விட்டிருக்கிறது. அமெரிக்காவுக்கு அடி சறுக்கியது பற்றி எந்த உலக நாடும் இதுவரை வெளிப்படையாக விமர்சிக்கவில்லை. ஆனால் உள்ளூர சிரித்துக் கொண்டிருக்கின்றன. அதைத் தான் டிரம்பினால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. வெளியிலும் சொல்ல முடியவில்லை. வெளியில் சொன்னால் பெருத்த அவமானமாகி விடும். இதே நிலை தான் சீனாவுக்கும் ஏற்பட்டிருக்கிறது. சீனாவின் அறிவியல், தொழில்நுட்பத்தை பற்றி பார்லிமென்டில் புகழ்ந்து பேசி, இந்திய அறிவியல், தொழில் நுட்பத்தை கேவலமாகப் பேசிய காங்கிரசின் ராகுல் காந்திக்கும், திராவிட கூட்டணி கட்சிகளுக்கும் இது ஒரு எச்சரிக்கையாக அமைந்து விட்டது. அமெரிக்கா தனக்கு நண்பன் என்பதால் இந்தியாவும் அமைதி காக்கிறது. எனவே,மோடி சொல்வதில் அர்த்தமிருக்கிறது. இந்திய ராணுவ வலிமையை கிள்ளுக் கீரையாக நினைத்ததின் பலனை இப்போது உலக நாடுகளை சிந்திக்க வைத்திருக்கிறது. இனி வரும் காலத்தில் உலகில் பல மாற்றங்கள் உருவாக இந்த ஆபரேஷன் சிந்தூர் ஒரு காரணமாகியிருக்கிறது என்றால் அது மிகையில்லை......!


Balasubramanian
மே 26, 2025 22:20

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடிக்க நினைத்தால்? என்னவாகும் என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார்!


Barakat Ali
மே 26, 2025 21:08

ஆழமான, நுட்பமான பதிலடி ......


Ramesh Sargam
மே 26, 2025 21:05

அவர்களுக்கு ரொட்டி மட்டும் போதாதாம். ரொட்டிக்கு தொட்டுக்க - அதாவது side dish - வேண்டுமாம். தோட்டாதான் அந்த side dish.


Anantharaman Srinivasan
மே 26, 2025 22:58

ரொட்டியை தோய்த்து சாப்பிட TEA போதுமாம்.


m.arunachalam
மே 26, 2025 20:49

சவால் விடும் விதத்தில் உள்ள அறிவிப்புகள் நமக்கு ஏதாவது ஒரு விதத்தில் பாதிப்பை உண்டாக்கும் . தெளிதல் நலம் .


சோலை பார்த்தி
மே 26, 2025 21:55

ஐயோ டா. .நம்ம பிரதமர் பாக்கிஸ்தானீக்கு சொல்லறதே நல்லவங்கனு யாரச்சும் இருந்தா தப்பிச்சு எங்கயாச்சும் போய்டுனு


vivek
மே 27, 2025 06:05

நீங்கள் உடனே பாகிஸ்தான் ஓடிவிடுவது உங்களுக்கு நலம்...


புதிய வீடியோ