உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஸ்சில் கடத்தி வந்த ஹவாலா பணம் ரூ.48 லட்சம் பறிமுதல்; ஒருவர் கைது

பஸ்சில் கடத்தி வந்த ஹவாலா பணம் ரூ.48 லட்சம் பறிமுதல்; ஒருவர் கைது

பாலக்காடு; பாலக்காடு அருகே பஸ்சில் கடத்தி வந்த, 48 லட்சம் ரூபாய் ஹவாலா பணத்துடன், ஒருவரை கலால் துறையினர் கைது செய்தனர்.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் வாளையார் கோவை- - கொச்சி தேசிய நெடுஞ்சாலையில், இன்ஸ்பெக்டர் பிரசாந்தின் தலைமையிலான கலால் துறையினர் நேற்று முன்தினம் இரவு வாகனச் சோதனை நடத்தினர்.அப்போது, கோவை பகுதியில் இருந்து கொச்சி நோக்கி சென்று கொண்டிருந்த, தனியார் பஸ்சை தடுத்து நிறுத்தி, பயணிகளிடம் நடத்திய சோதனையில், மகாராஷ்டிரா மாநிலம் சங்கிலி தாலுகா கிலேமசித்ரகட் பகுதியைச்சேர்ந்த கணேஷ் அசோக் ஜாதவ்,30, என்பவரின் பையில், 500 ரூபாய், 96 நோட்டு கட்டுகளாக, எந்தவித ஆவணமுமின்றி, 48 லட்சம் ரூபாய் மறைத்து வைத்திருப்பதைக்கண்டு பிடித்தனர். இதையடுத்து அவரை கைது செய்து நடத்திய விசாரணையில், பணத்தை பெங்களூருவில் இருந்து கொட்டாரக்கரை பகுதிக்கு கடத்திச்செல்லும் போது, சிக்கியது தெரிந்தது. பறிமுதல் செய்த பணத்துடன், கைது செய்த கணேஷ் அசோக் ஜாதவை, கலால் துறையினர் தொடர் விசாரணைக்காக வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை