உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பொய் பேசுவதில் வல்லவர்!

பொய் பேசுவதில் வல்லவர்!

நான் ஏற்கனவே பல முறை கூறியிருக்கிறேன். பொய் பேசுவதில் ராகுல் வல்லவர். நாட்டின் முக்கிய விவகாரங்கள் அனைத்திலும் அவர் பொய் மட்டுமே பேசி உள்ளார். தன் குற்றச்சாட்டுக்கு எந்தவொரு ஆதாரமும் அவர் தரவில்லை. எப்போதுமே பொய் பேசும் ராகுலுக்கு சிலர் ஒத்து ஊதுவது வருத்தம் அளிக்கிறது. தேவேந்திர பட்னவிஸ் மஹாராஷ்டிரா முதல்வர், பா.ஜ.,

மத அடிப்படையில் அல்ல!

'ஆப்பரேஷன் சிந்துார்' மூலம் பாகிஸ்தானுக்கு நம் ஆயுதப் படைகள் தக்க பதிலடி கொடுத்தன. அந்நாடு மறக்கவே முடியாத அளவுக்கு பலத்த அடி கொடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது, மதத்தின் அடிப்படையில் நம் படைகள் பயங்கரவாதிகளை கொல்லவில்லை. அவர்களின் தீய செயலுக்காகவே கொல்லப்பட்டனர். ராஜ்நாத் சிங் ராணுவ அமைச்சர், பா.ஜ.,

துளி கூட அக்கறை இல்லை!

டில்லியில், அரசு போட்டித் தேர்வுகளை நியாயமா க நடத்தக் கோரி அமைதியாக போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது, போலீசார் தடியடி நடத்தியது கண்டனத்துக்குரியது. இளைஞர்களின் நலன் மீது, மோடி அரசுக்கு துளி கூட அக்கறை இல்லை. ஓட்டுகளை திருடி குறுக்கு வழியில் ஆட்சிக்கு வருவதே பா.ஜ., வின் குறிக்கோள். ராகுல் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர், காங்கிரஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி