உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆந்திராவில் 20 பேரின் உயிரை பறித்த மர்ம நோயால் மக்கள் அச்சம்: சுகாதார அவசர நிலை பிரகடனம்

ஆந்திராவில் 20 பேரின் உயிரை பறித்த மர்ம நோயால் மக்கள் அச்சம்: சுகாதார அவசர நிலை பிரகடனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

குண்டூர்: ஆந்திராவின் குண்டூரில் பரவும் மர்ம நோய்க்கு கடந்த இரு மாதங்களில் மட்டும் 20 பேர் உயிரிழந்ததை அடுத்து, அம்மாவட்டத்தில் சுகாதார அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் - பா.ஜ., - ஜனசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு குண்டூர் மாவட்டத்தில் உள்ள துரகபாலம் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக மர்ம நோய் பரவி வருகிறது. இரு மாதங்களில் மட்டும் மர்ம நோயால் பாதிக்கப்பட்டு, 20 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவ முகாம் இதைத் தொடர்ந்து, நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக சந்திரபாபு நாயுடு வெளியிட்ட அறிக்கை: துரகபாலம் கிராமத்தில் உயிரிழப்புகள் தொடர்ந்து வருவதை அடுத்து, அங்கு சுகாதார அவசர நிலை பிரகடனப்படுத்தப்படுகிறது. நோயால் பாதிக்கப்பட்ட மக்களை மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கவும் சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது. வார இறுதி நாட்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட வேண்டும். அந்த கிராமத்தில் வசிக்கும் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனைகள் நடத்தி, தேவையான மருத்துவ உதவிகள் வழ ங்க வேண்டும். எய்ம்ஸ் மருத்துவமனை நிபுணர்களின் உதவியையும், மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் நாடலாம். தேவையெனில் சர்வதேச நிபுணர்களிடமும் க லந்தாலோசிக்கலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரம், மர்ம நோயால், புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை என்றும், நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். காய்ச்சல், இருமல், நிமோனியா மற்றும் தோல் அலர்ஜியை பரப்பும் 'மெலியோய்டோசிஸ் வைரஸ்' பரவலே இதற்கு காரணமாக இருக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் சந்தேகிக்கின்றனர். குற்றச்சாட்டு எனினும் சோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட ரத்த மாதிரிகளின் முடிவு வந்த பிறகே, உண்மையான காரணம் தெரியவரும் என கூறப் படுகிறது. முதற்கட்ட மருத்துவ பரிசோதனையில் கால்நடைகள் மூலம் இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவியிருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது. மழைகாலங்களில் தான் இந்த வைரஸ் வேகமாக பரவும் என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். அதே சமயம் மாநில அரசு, மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் அலட்சியமாக நடந்து கொள்வதாக எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர்., காங்., தலைவர் அம்பதி ராம்பாபு குற்றஞ்சாட்டியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

venugopal s
செப் 08, 2025 15:07

ஆந்திரா தென்னிந்தியாவின் பீகார்!


R SRINIVASAN
செப் 08, 2025 08:05

தைத்ரியோஉபநிஷத்தில் வரும் சூரிய நமஸ்காரம். இதன் பொருள் நதிகளிலும், ஏரி ,குளங்களில் குளிக்கும்பொழுது மல ஜலம் கழிக்கக்கூடாது என்பதே. ஆனால் இன்று இந்தியா முழுவதிலும் சாலைகள் குண்டும் குழியுமாக குப்பைகள் நிறைந்ததாக காணப்படுகின்றன. மக்களிடம் விழிப்புணர்வு இல்லை .அயல் நாடுகளில் இம்மாதிரி நடந்தால் அபராதம் கற்பனைக்கு எட்டாத உயரத்தில் இருக்கும். அரசியல் கட்சிகள் தமிழ் நாட்டில் ஜாதி மத அரசியலை கைவிட்டு சுகாதாரத்தில் கவனத்தை செலுத்தினால் மக்கள் நோய் நொடி இல்லாமல் இருப்பார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை