மேலும் செய்திகள்
அறிவியல் ஆயிரம் : வெப்பத்தில் பாறை உருகுமா...
26-Jan-2025
புதுடில்லி: பெங்களூருவில் இன்று அதிகபட்சமாக 35.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது. வரவிருக்கும் நாட்களில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:வரும் வாரங்களில் பெங்களூரு வெப்பமான நாட்களை எதிர்கொள்ளும்.கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில், கர்நாடகாவில் வெப்பநிலை 2.7 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது.மறுபுறம், டில்லியில் 29 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.பிப்ரவரி 17, 2025 அன்று பெங்களூருவில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பமான நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்று 35.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதற்கு நேர்மாறாக, டில்லியின் இன்றைய வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாக இருந்தது.வழக்கமாக,பெங்களூருவில் கோடை காலம் மார்ச் முதல் வாரத்தில் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி வாரத்தின் நடுப்பகுதியில் தொடங்கிவிட்டது.வடக்கு காற்று இல்லாததே இந்த மாற்றத்திற்கு காரணம். நடந்து வரும் எல் நினோ நிகழ்வு பெங்களூருவின் வானிலையை பாதிக்கக்கூடும். வரும் நாட்களில் வெப்பநிலை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
26-Jan-2025