வாசகர்கள் கருத்துகள் ( 3 )
சூப்பர்
செய்யார் ரெயின் வருமா ப்ளீஸ்
கனமழை பிரிந்தால் பெய்து கொண்டு போகட்டும்
சென்னை: நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் மலைப்பகுதிகளில் இன்று (ஆகஸ்ட் 03) முதல் 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை, நீலகிரி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், திருநெல்வேலி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழையும் இன்று (ஆகஸ்ட் 03) பெய்ய வாய்ப்புள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9btduz95&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி மாவட்டங்களில் கனமழையும் நாளை (ஆகஸ்ட் 04) பெய்ய வாய்ப்பு உள்ளது. நீலகிரி மற்றும் கோவை மலைப்பகுதிகளில் கன முதல் அதி கனமழையும், தேனி, தென்காசி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 05) பெய்ய வாய்ப்பு உள்ளது.மீனவர்களுக்கான எச்சரிக்கை
தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலின் பல பகுதிகளில் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் 7ம் தேதி வரை மணிக்கு 40 முதல் 65 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீச வாய்ப்பு உள்ளது. எனவே, மீனவர்கள் இந்த நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
சூப்பர்
செய்யார் ரெயின் வருமா ப்ளீஸ்
கனமழை பிரிந்தால் பெய்து கொண்டு போகட்டும்