ஹிமாச்சலில் கொட்டியது கனமழை; 5 மாடி கட்டடம் இடிந்து தரைமட்டம்; 24 மணி நேரத்தில் 3 பேர் பலி!
சிம்லா: ஹிமாச்சல் மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கனமழை காரணமாக, 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை பருவமழை காரணமாக 20 பேர் பலியாகி இருக்கின்றனர்.இந்தியா முழுவதும் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. ஹிமாச்சல் மாநிலத்தில் பலத்த கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. சிம்லாவில் உள்ள ஐந்து மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக, யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வீடு இடிந்து விழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மாநிலம் முழுவதும் 129 சாலைகள் மூடப்பட்டுள்ளன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6z5i0pb9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சிவாலிக் நகரில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. கனமழையால் கடந்த 24 மணி நேரத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இதுவரை பருவமழை காரணமாக 20 பேர் பலியாகி இருக்கின்றனர். காங்க்ரா, மண்டி, சோலன் மற்றும் சிர்மௌர் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. ஹிமாச்சல், உத்தரகண்டிற்கு இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல், டில்லிக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.